Home நிகழ்வுகள் தமிழகம் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வெப்ப அலை: வானியல் துறை எச்சரிக்கை

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வெப்ப அலை: வானியல் துறை எச்சரிக்கை

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வெப்ப அலை

சென்னை: தமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் தற்போது பூதாகரமாகிவருகிறது அதில் ஒன்று கொரோனா பரவல் மற்றொன்று வெப்பம் அதிகரித்தல். அதிகாரிகள் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வெப்ப அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

அந்த மாவட்டங்களின் பெயர்கள் பின் வருமாறு

1.மதுரை
2.திருச்சி
3.கரூர்
4.ஈரோடு
5.வேலூர்

ஏற்கனவே திருத்தணி போன்ற இடங்களில் வெயில் உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

வட இந்தியாவில் 45 டிகிரி செல்சியஸையும் தாண்டிய வெயில்

வட இந்தியாவில் 45 டிகிரி செல்சியஸையும் தாண்டி வெயில் வாட்டி வரும் நிலையில், இந்திய வானியல் துறை டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சிகப்பு வண்ண எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

வானியல் துறை, கிழக்கு உத்தர பிரதேசத்திற்கு ஆரஞ்ச் வண்ண எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

வெயில் 47 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்பு

இந்திய வானியல் துறையின் மண்டல வானியல் மைய அதிகாரி குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவிக்கையில் இன்னும் இரண்டு முதல் மூன்று நாட்களில் வெப்பம் 47 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் அதிகமாக கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Previous articleகொரோனா இருப்பதால் கருணாநிதி பிறந்த நாளில் திமுக பொதுக்கூட்டம் இல்லை
Next article27/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here