நேற்று தமிழகத்தில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 569 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று கொரோனா நோய் உறுதியான 786 பேரில் 569 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,364 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மொத்த பாதிப்பில் 902 பேர் 12 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். நேற்று 4 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து 846 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து மாநிலத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 7,128 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் 3,68,939 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
நேற்று மட்டும் தமிழகத்தில் 12,653 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 40, திருவள்ளூர் 39, காஞ்சிபுரம் 13 பேர் என நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.



