Home நிகழ்வுகள் தமிழகம் பொள்ளாச்சி பாணியில் தென்காசி பாலியல் கும்பல்

பொள்ளாச்சி பாணியில் தென்காசி பாலியல் கும்பல்

1321
1
தென்காசி பாலியல் கும்பல் காதல் மன்னன் கண்ணன் சிக்கியது எப்படி?

பொள்ளாச்சி பாணியில் தென்காசி பாலியல் கும்பல் ஒன்று பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து உள்ளது. காதல் மன்னன் கண்ணன் சிக்கியது எப்படி?

கோவை பொள்ளாச்சி பாலியல் கும்பல்

கோவை பொள்ளாச்சி பாலியல் கும்பல் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்து மிரட்டி அவர்களின் வாழ்க்கையை சீரழித்தனர்.

இந்த நிகழ்வு தமிழகத்தையே உலுக்கியது. அந்த பெண்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என பலர் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

டெல்லியில் நிர்பயா பாலியல் குற்றவாளிகளுக்கு இன்னும் தூக்குதண்டனை வழங்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் இந்திய சட்டத்தை விமர்சித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி கும்பலை போன்று தென்காசி டிக்டாக் கும்பல் ஒன்று பெண்களை மிரட்டி பணம் பறித்து போலீசிடம் சிக்கியுள்ளது. இந்த கும்பலின் தலைவன் காதல் மன்னன் கண்ணன்.

காதல் மன்னன் கண்ணன் சிக்கியது எப்படி?

தென்காசி மாவட்டம் சுரண்டை, அருணாசலபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரின் மகன் கண்ணன் (19).

கண்ணன் டிக்டாக்கில் “காதல் மன்னன் கண்ணன்” என்ற பெயரில் கணக்கு துவங்கியுள்ளார். முதலில் தனியாக வீடியோ இட்டு வந்துள்ளார்.

அதன்பிறகு தன்னுடன் படிக்கு மாணவிகளிடம் நைசாக பேசி டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். பெண்கள் வீடியோவில் தோன்றியவுடன் இவரின் பாலோவர்கள் கூடியுள்ளது.

5 லட்சத்திற்கும் மேல் பாலோயர்களை கொண்டுள்ளார். இதனால் கண்ணனை ஏராளமான பெண்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

கிடைக்கும் நேரத்தில் கிடைத்த பெண்களுடன் டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார்.

தென்காசி பாலியல் கும்பல்

ஒரு கட்டத்தில் இவருடன் பழகிய வசதியான பெண்களை ஆபாசமாக டிக்டாக் எடுத்து அதை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.

லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளார். தொடர்ந்து ஒரு பெண்ணுக்கு பணம் கேட்டு தொல்லைகொடுக்கவே அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதன் பின்பு உள்ளே புகுந்த போலீசார் கண்ணனை நையப்புடைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரை போன்று இன்னும் சில பெணகளை வலையில் வீழ்த்த முயற்சித்தது தெரியவந்தது.

கண்ணனின் பாலியல் மிரட்டலுக்கு அவருடைய நண்பர்களும் உடந்தை என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே கண்ணன் சிக்கிவிட்டதால் பல பெண்களின் வழக்கை காப்பற்றப்பட்டு உள்ளது.

Previous articleAnushka: அனுஷ்காவுக்கு இவர் தான் மாப்பிள்ளையா?
Next articleVaa Chellam: வா செல்லம் லிரிக் வெளியீடு!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here