கமலை ஒதுக்கும் தமிழக கட்சிகள்; கூட்டணி என்ன ஆனது?
கமல் கட்சி ஆரம்பிக்கும் முன்பே, ஏதாவது ஒரு தேசியக்கட்சியில் இணைவது என்று முனைப்புக் காட்டினார்.
ஆனால் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சி வரை நடிகர் கமலை ஆதரிக்க முன்வரவில்லை.
அதன்பிறகு தனிக்கட்சி துவங்கினார். அப்போதும் ஏதாவது ஒரு தேசியக்கட்சியுடன் கூட்டணி வைத்து ஒரு பரபரப்பை உருவாக்க முயன்றார்.
அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்துவிட்டது. டெல்லி கம்யூனிஸ்ட் தலைவர், கேரள முதல்வர் பினராயி இவர்களிடம் பேசியும் தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட்கள் கமலை ஆதரிக்க தயாராக இல்லை.
இதனால் கூட்டணியா? தனித்துப்போட்டியா எனும் நிலையான முடிவைக்கூட இன்னும் எடுக்கவில்லை.
ஐ.ஜே.கே. கட்சித்தலைவர் பச்சமுத்துவையும் சந்தித்துப்பேசினார். ஆனால் அவர் அதிமுக, திமுக கூட்டணியில் இணையவே முனைப்புக்காட்டி வருகிறார்.
தேமுதிக என்ன நிலைப்பாடு எடுக்க உள்ளது என்பதை பொறுத்தே கமலின் அடுத்த முடிவு இருக்கும். எந்த கூட்டணிக்கு சென்றாலும் கமலுக்கு 1 சீட் கொடுக்கவே தயாராக உள்ளது.
இது கமலுக்கு பெரும் பின்னடைவே ஏற்படுத்தும். தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட வாக்குவங்கியைப் பெற கமல் விரும்புகின்றார் எனவே தனித்தே நிற்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.