கொரோனா பரிசோதனை செய்யும் ரேபிட் கிட் கருவிகளின் விலையை கேட்கும் மு.க. ஸ்டாலின், இது குறித்த உண்மையை மக்களுக்கு தெரிவிக்க ஸ்டாலின் வேண்டுகோள்.
கொரோனா பாதிப்பை வெறும் 10 நிமிடத்தில் கண்டறியும் 24000 ரேபிட் கிட் கருவிகள் தமிழக அரசு வாங்கியுள்ளது. இனி இந்த கருவியின் மூலம் பரிசோதனை நடத்தவுள்ளனர்.
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இந்த கருவிகள் தற்போது புழக்கத்தில் உள்ளது. கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டன?
என்ன விலைக்கு வாங்கப்பட்டன? எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது? என்பதை சத்தீஸ்கார் மாநில மந்திரி வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
அதே போல் தமிழக அரசும் உண்மைத்தன்மையாக செயல்பட்டு மக்களிடம் தகவலகலை தெரிவிக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.