Home சினிமா கோலிவுட் ரஜினி-சசிகலா: தர்பார் ரகசியத்தை உடைத்த ஜெயக்குமார்!

ரஜினி-சசிகலா: தர்பார் ரகசியத்தை உடைத்த ஜெயக்குமார்!

517
0
ரஜினி-சசிகலா பொங்கல் பரிசு அமைச்சர் ஜெயக்குமார் தர்பார்

ரஜினி-சசிகலா: தர்பார் படத்தில் வரும் ஒரு காட்சியை சசிகலாவுடன் ஒப்பிட்டு, பொங்கல் பரிசு வழங்கியபோது அமைச்சர் ஜெயக்குமார்  பேட்டி அளித்தார்.

தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு

தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும், சுமார் 35000 ரேஷன் கடைகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை ‘பொங்கல் பரிசு’ வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு பொருட்கள்

ஒரு குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் ரொக்கப்பணம். ஒரு கரும்புத் துண்டு, சர்க்கரை, பச்சரிசி, ஏலக்காய், முந்திரி எனப் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் இடம்பெற்று உள்ளது.

மேலும் குடும்பத் தலைவருக்கு வேட்டியும், குடும்பத் தலைவிக்கு சேலையும் வழங்கப்பட்டு உள்ளது,

ஸ்மார்ட் கார்டு அவசியம்

மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) மூலமாகவே பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்கார்டு இல்லாதவர்கள் பழைய ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

பொங்கல் பரிசு வாங்கியவுடன் குடும்ப அட்டைதாரர்களின் மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு விடும்.

இந்தப் பரிசு தமிழகம் முழுவதும் 2.5 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு ரூ.2363 கோடியை பட்ஜெட் தொகையாக ஒதுக்கி உள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை இராயபுரம் கூட்டறவு அங்காடியில் அமைச்சர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கிய பின்பு நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார்.

ஜெயக்குமார் கூறியதாவது, பொங்கல் பரிசு 4 நாட்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்படும். ஒரு கடையில் 300 பேருக்கு தினசரி வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் காலையிலேயே வந்து காத்திருக்க வேண்டாம். இரவு 7 மணி வரை வழங்கப்படுவதால் பொறுமையாக வந்து வாங்கி செல்லுங்கள்.

பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பொங்கல் பரிசினை பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

தர்பார் ரஜினி-சசிகலா

மேலும் அவர் கூறியதாவது, “தர்பார் திரைப்படத்தில் சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் மனிதர்கள், பணத்தினால் எதையும் சாதிக்க முடியும் என நினைப்பவர்களைப் பற்றி கூறப்பட்டு உள்ளது.

பணம் பாதாளம் வரைக்கும் பாயும் அதேசமயத்தில் பணம் சிறைச்சாலை வரைகூட பாயும் என்று கூறினார்.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில், இப்போதெல்லாம் சிறையிலிருப்பவர்கள் ஷாப்பிங் போகிறார்கள் என்று ரஜினியிடம் பேசுவதாக வசனம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டு உள்ளது என தர்பார் படத்தில் சசிகலா பற்றி இருந்த ரகசியத்தை கூறி விமர்சனம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here