Home நிகழ்வுகள் தமிழகம் ஆசிரியை ரம்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்

ஆசிரியை ரம்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்

666
0
ஆசிரியை ரம்யா

ஆசிரியை ரம்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் ரம்யா (வயது 23). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.

ரம்யா, அவருடைய ஊரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை நீண்ட வருடமாகக் காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாகக் பழகியதாகக் கூறப்படுகிறது.

அதன்பின்பு ரம்யா, ராஜசேகரை திருமணம் செய்ய விரும்புவதாகக் பெற்றோரிடம் கூறியுள்ளார். இருவரும் வேறுவேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் மறுத்துள்ளனர்.

எனவே, ராஜசேகரிடம் எடுத்துக்கூறி தன்னை மறந்துவிடும்படி ரம்யா வலியுறுத்தி உள்ளார். மேலும் ராஜசேகருடன் பேசுவதையும் நிறுத்திவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர், ரம்யா பணிபுரியும் பள்ளிக்குச் சென்று அவர் தனியாக இருக்கும் நேரத்தில் அவருடைய கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜசேகரை தேடிவந்தனர்.

நான் தற்கொலை செய்துகொள்கிறேன் எனக்கூறி தங்கையின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார் ராஜசேகர்.

அந்த எஸ்.எம்.எஸ் திருநாவலூர் காட்டுப்பகுதி அருகில் உள்ள டவ்வரில் இருந்து வந்ததால் அங்கு சென்று போலீசார் ராஜசேகரைத் தேடியுள்ளனர்.

அதற்குள் ராஜசேகர் அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர் போலீசார்.

Previous articleமோடியே மறந்துபோன தூய்மை இந்தியா; கமல் மறக்கவில்லை!
Next articleவெள்ளை வேஷ்டி, சட்டை, துண்டு: கோவிந்தா போட்ட ராகுல்காந்தி
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here