Home நிகழ்வுகள் தமிழகம் உயிர்க்கு போராடும்போது, குழாயடி சண்டையிடும் ஸ்டாலின் எடப்பாடி

உயிர்க்கு போராடும்போது, குழாயடி சண்டையிடும் ஸ்டாலின் எடப்பாடி

338
0

உயிர்க்கு போராடும்போது, குழாயடி சண்டையிடும் ஸ்டாலின் எடப்பாடி. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்லிக்கொண்டே அரசியல் செய்யாதீர்கள் எனக் கூறுகிறார்கள்.

கொரோனாவால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தாமதமாக பரவ ஆரம்பித்த கொரோனா திடீரென அசுர வேகம் எடுத்துவிட்டது.

கரூர் மருத்துவமனைக்கு அரவக்குறிச்சி எம்.பி. செந்தில் பாலாஜி, மருத்துவ உபகரணங்கள் வாங்கிக்கொள்ள ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கி இருந்தார்.

முதலில் இதை ஏற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், பிறகு எம்.பி.நிதி அந்த அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே செலவிட முடியும் எனத் தெரிவித்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த முக ஸ்டாலின் டிவிட்டரில் இது பற்றி கூறி இருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் உடனே பதில் கூறியிருந்தார்.

இந்திய சட்ட விதிகளை பின்பற்றி தான் இவ்வாறு கூறப்பட்டு உள்ளது இது தெரியாமல் முக ஸ்டாலின் இதை அரசியல் ஆக்குகிறார் எனத் தெரிவித்து இருந்தார்.

ஆக மொத்தத்தில் மக்கள் செத்தால் கவலை இல்லை என இருவருமே இந்த நேரத்திலும் டிவிட்டரில் குழாயடி சண்டை நடத்தி வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here