சென்னை: அரசால் வெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்திய குடிமக்களை விமானங்கள் கொண்டு மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், அந்த விமாங்களில் இடம் கிடைப்பது மற்றும் பயணச்சீடின் விலை காரணமாக பலராலும் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மலேசியா
மலேசியாவில் சிக்கித்தவிக்கும் பல பேர் கொச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு விமானங்களுக்கு ₹.15,000 மதிப்புள்ள விமானச்சீட்டு பெறுவதற்காக நல்ல உள்ளம் படைத்தவர்களிடம் உதவி கேட்கும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் இருந்து சென்னை செல்லும் விமானம் 180 பயணிகளுடன் திங்கட்கிழமை வந்தடைந்தது இருந்தாலும், இன்னும் வரவேண்டிய பல பேர் மலேசியாவில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலாவுக்கு சென்ற 10 பேரில் ஒருவர் மட்டுமே விமானத்தில் இந்தியா திரும்பி உள்ளார் மீதி பேர் பினாங்கில் உள்ள ஒரு கோவிலில் மாட்டிக்கொண்டுள்ளனர்.
உதவிய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் குழு
“விமான சீட்டு வாங்கி பயணம் செய்யமுடியாதவர்கள் பல பேர் வீடுதிரும்பியதற்கு காரணம் சிலர் சேர்ந்து குழு அமைத்து உதவிபுரிந்ததால் தான், அவர்களுக்கு உணவு, இருப்பிடம் போன்றவை மலேசியாவில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் வழங்கப்படுகின்றன,” என சிக்கியுள்ளவர்களை ஒருங்கினைத்த ஜிப்சன் என்பவர் தெரிவித்தார். மேலும் அவர் ஒரு கர்பிணிபெண் உட்பட சில பேர் கொச்சின் செல்லமுடியாமல் தவித்து வருகின்றர் எனவும் அவர் தெரிவித்தார்.