சென்னை: தமிழ்நாடு அரசு வியாழக்கிழமை தகவல் தொழிநுட்ப துறையில் நேரடியாக பணிபுரிபவர்களின் பணித் தேவையை கருத்தில் கொண்டு 10% பணியாட்களை சென்னை மண்டலத்தில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிய அணுமதி வழங்கியது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பயண்
தமிழக அரசின் இந்த முடிவால் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாக கருதப்படும் டி.சி.எஸ், ஹெச்.சி.எல், காக்னிசெண்ட், ஐபிஎம் மற்றும் மற்ற பல நிறுவனங்கள் பயணடையும் என தெரிகிறது.
இந்த அறிவிப்பு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது
மேலும் அந்த அறிக்கையில் பணியாட்கள் அலுவல பேருந்தில் சென்று பணிபுரியலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு உடனடியாக அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த குழு ஒன்று மாநில தகவல் தொழ்நுட்ப செயலாளர் கன்ஸ் ராஜ் வெர்மாவை வெள்ளிக்கிழமை சந்தித்து தகவல்தொழில்நுட்ப பணியாளர்களின் தேவை மற்றும் அவசியம் குறித்து தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.