ஆம்பன் புயலால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று வலுப்பெற்றது.
சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களாக இருந்துவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மதியத்திற்கு மேல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது.
இதனால் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக இருந்ததால் மீண்டும் வலுவடைந்து சூறாவளியாக மாறியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட்டுள்ளது.
தாய்லந்திலிருந்து இந்த புயலுக்கு ஆம்பன் (Amphan) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சூறாவளி புயல், மேலும் வலுப்பெற்று அதிதீவிர சூறாவளி புயலாக மாறி இன்று வாடமேற்கு திசையில் நகரும்.
பின்னர் திசையில் மாற்றம் பெற்று வடக்கு மற்றும் வாடா கிழக்கு திசையை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலின் தாக்கம் தமிழகத்தை தாக்காது எனினும் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு வாடா தமிழகத்தில் வெப்பநிலை உயரும். குறிப்பாக 2-3-டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் 40-42 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் தேவையில்லாமல் மதிய நேரங்களில் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் தற்போது வடமேற்கு திசையை நோக்கி 16 கி.மீ வேகத்தில் நகர்கின்றது. இதன் காரணமாக காற்று அதிகமாக வீசக்கூடும் என்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய புயலின் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 670 கி.மீ தொலைவிலும், புவனேஸ்வரிலிருந்து தெற்க்கே 1160 கி.மீ தொலைவிலும், கொல்கத்தாவிலிருந்து தேன் மேற்கு திசையில் 1400 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இந்த புயல் 20-ம் தேதி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.