Home அரசியல் 40 ஆண்டுகால வரலாறு: தலித் தலைவர்; பாஜகவின் புதிய புரட்சி – சிஎம் நாற்காலி தயார்

40 ஆண்டுகால வரலாறு: தலித் தலைவர்; பாஜகவின் புதிய புரட்சி – சிஎம் நாற்காலி தயார்

2507
1
40 ஆண்டுகால வரலாறு எல்.முருகன்

40 ஆண்டுகால வரலாறு: தலித் தலைவர்; பாஜகவின் புதிய புரட்சி – சிஎம் நாற்காலி தயார். தமிழக சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராதா திருப்பம் எல்.முருகன் நியமனம்.

எல்.முருகன் தலைவரானது எப்படி?

பாஜக தேசியத் தலைவர் பதவியில் இருந்த அமித்ஷா ஜனவரி மாதம் அந்த பதவியில் இருந்து விலகினார். அவருக்குப்பின் அந்த அந்த பதவியில் அமர்ந்தவர் ஜெ.பி.நட்டா.

நட்டா பொறுப்பேற்றவுடன் காலியாக இருந்த பாஜக மாநிலத் தலைவர்களை நியமிக்கும் பணியை மேற்கொண்டார்.

எல்.முருகன் ஏற்கனவே நட்டாவிற்கு நன்கு பரிட்சியம் ஆனவர். இதனால் எளிதில் நட்டாவின் பட்டியலில் எல்.முருகன் இடம்பெற்றார்.

வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் இப்படி நன்கு தெரிந்த முகங்களை ஓரம்கட்டி விட்டு எல்.முருகன் தலைவராகி  உள்ளார்.

எல்.முருகன் தெரிந்த முகம் என்பதால் மட்டும் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யவில்லை. மிகப்பெரிய திட்டத்துடன் பாஜக வரும் தேர்தலை சந்திக்க உள்ளது.

40 ஆண்டுகால வரலாறு தலித் தலைவர்

தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகள் தலித்களுக்கு இடஒதுக்கீடு செய்வார்கள். ஆனால் தலைவர் பதவி மட்டும் வழங்க மாட்டார்கள்.

இந்த நான்கு கட்சியில் தமிழக தலித் தலைவர் லிஸ்ட் எடுத்தால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் எல்.இளையபெருமாள் மட்டுமே.

அவர் பதவி வகித்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன்பிறகு இந்தக் கட்சிகளில் தலித் தலைவர்கள் நியமிக்கப்பட்டது இல்லை.

திருமாவளவன் போன்றவர்கள் தங்கள் சமூகத்திற்கு என தனிக்கட்சி துவங்கியே தலைவராக மாறினர். முன்னணி கட்சியில் கூட்டணியில் மட்டுமே இடம் வகிக்க முடியும்.

அதிகம் பட்சம்போனால் அமைச்சர் பதவி, எம்.பி பதவி கிடைக்கும். அதுவும் ஏதாவது ஒரு டம்மி துறை மட்டுமே பெயரளவில் ஒதுக்கப்படும்.

இதை நன்கு கவனித்த பாஜக தலித் மக்களின் கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடிவு செய்ததுள்ளது.

குறிப்பாக பாஜகவில் பிராமணர் பாகுபாடு உள்ளது என சில மாதங்களுக்கு முன்பு நிர்மலா சீதாராமன் முன்னிலையில் தமிழிசை கீழே அமர்ந்து சாப்பிட்டார் என சர்ச்சை வெடித்தது. இதைக் களையவே இந்த முக்கிய முடிவு என கூறப்படுகிறது.

மேல் ஜாதி மக்கள் ஓட்டு?

தலித் தலைவர் என்றால் மேல் ஜாதியினர் ஓட்டு பறிபோகுமே எனக் கேள்வி எழலாம். அதற்கு தான் அதிமுக, பாமக கைவசம் உள்ளது.

இந்த கட்சிகளில் பெரும்பான்மையான வாக்கு வங்கிகள் மேல் சமூகத்தை சேர்ந்தவர்களிடமே உள்ளது.

பாமக கூட்டணிக்குள் இருந்தால், விசிக அந்தக் கூட்டணிக்குள் வராது. இருகட்சிகளும் எலியும், பூனையுமாக உள்ளனர். இதுதான் இதுவரை நடந்து வரும் தமிழக அரசியல்.

எல்.முருகனை கொண்டு வி.சி.க.வை கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சி நடக்கும். இந்த கணக்கு சரியாக வருமா என திருமாவளவன் எடுக்கும் முடிவில் தான் உள்ளது.

பாஜகவை வழுவாக எதிர்ப்பவர்கள்

இஸ்லாமிய மக்கள் ஆரம்பம் முதலே பாஜகவை வழுவாக எதிர்த்து வருகின்றார். அவர்களுடன் ரஜினி சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.

இதில் எந்த மாதிரியான பேச்சுவார்த்தைகள் நடந்தன என்பது உண்மையான விவரம் வெளிவரவில்லை. அதன்பிறகே எல்.முருகன் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இஸ்லாமிய ஓட்டுகளை தவிர்த்து மற்ற அனைத்து சமூக குட்டிக்கட்சிகளை ஒன்றிணைத்து தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றி சாதனை படைத்து சரித்திரத்தை மாற்றி எழுத பாஜக முடிவு செய்துள்ளது.

பாஜகவின் வியூகம் எந்த அளவு ஒர்கவுட் ஆகும் என்பது போகப் போகத்தான் தெரியும். எல்.முருகன் தலைவராகியது சற்று பாஜகவின் மீது இருந்த பார்வையை மாற்றி உள்ளது என்பது மட்டும் உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here