பாகிஸ்தான் ஃபைனல் வந்தா கப்பு போயிடுமே? – குழம்பிய பிசிசிஐ
ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி இந்தியத் துணை ராணுவப்படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் குளறுபடி காரணமாக இருநாட்டு அணிகளுமே கிரிக்கெட் போட்டிகளில் நேரடியாக பங்கேற்பது இல்லை.
இந்நிலையில், புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாடுகளும் உலகக்கோப்பையில் விளையாடுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியக் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என மும்பையில் இருக்கும் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா பிசிசிஐயை வலியுறுத்தியது.
பிசிசிஐ இன்று கூறுகையில், ‘உலகக்கோப்பைப் போட்டி நெருங்கி வருகிறது. போட்டி அட்டவணையை மாற்றமுடியாது என ஐசிசி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
உலகக்கோப்பைப் போட்டியின் போது, பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடக்கூடாது என்று மத்திய அரசு விரும்பினால் நாங்கள் விளையாட மாட்டோம்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நாம் விளையாடாமல் போனால் நமக்குரிய புள்ளிகளை இழக்க நேரிடும்.
ஒருவேளை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட நேரிட்டு, போட்டியைப் புறக்கணித்தால் பாகிஸ்தான் வெற்றிபெற்றதாக அறிவித்துவிடுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுடன் மோதி முதல் போட்டியிலேயே ரிவிட் அடித்து அனுப்ப வேண்டும் என ரசிர்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.