Home நிகழ்வுகள் உலகம் தவறான ஆய்வு முடிவுகள் இஸ்ரேல் ஆய்வகம் மூடல்

தவறான ஆய்வு முடிவுகள் இஸ்ரேல் ஆய்வகம் மூடல்

313
0

ஜெருசேலம்: இஸ்ரேல், தவறான முடிவு தந்த கொரோனா ஆய்வகத்தை மூடியது. இங்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 19 பேருக்கு தவறான முடிவுகளை இது கொடுத்திருக்கிறது.

இந்த ஆய்வகம் மத்திய இஸ்ரேலில் உள்ள வெய்ஸ்மான் அறிவியல் நிறுவனம் (WIS)த்தில் நிறுவப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. இது ஏப்ரல் 10 முதல் செயல்பாட்டுக்கு வந்த ஆய்வகம் என தெரிகிறது.

சோதனை முடிவு தவறு

இந்த ஆய்வத்தில் ஏப்ரல் 17இல் கொரோனா உறுதி என்று அறிவிக்கப்பட்டு  தெற்கு இஸ்ரேலில் இருந்த ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரும் ஆரோக்கியமானவர்கள் என பின்பு கண்டறியப்பட்டது.

இதே போன்று வேறு இரண்டு மருத்துவமனைகளிலும் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த ஆய்வகம் தெரிவிக்கையில் அரசு நியமித்த அதிகாரிகளால்  மீண்டும் ஆய்வு முடிவுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே கொரோனா நோயாளிகள் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள் என விளக்கம் அளித்தது.

இதற்கு அரசும் பொறுப்பேற்கவேண்டும் என அந்த ஆய்வகம் தெரிவித்ததை அடுத்து அரசும் விசாரணை நடத்தியதாக தெரிகிறது

பிறகு அரசு தரப்பில் இந்த ஆய்வகம் தகுந்தமுறையில் சீர்அமைக்கப்பட்டவுடன் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது வரை இஸ்ரேலில் 13,491 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 172 பேர் இந்த நோய் தாக்குதலில் இறந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here