நான் பிழைப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை; கொரோனா நபரின் கண்ணீர் கதை. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்.
கொரோனா நபரின் கண்ணீர் கதை
முதல் ஆப்ரிக்க மனிதர்
சீனாவில் வேலைக்குச் சென்ற ஆப்ரிக்காவைச் சேர்ந்த கெம் சென்யு என்ற நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தற்பொழுது பூரண குணமடைந்துவிட்டார். அவர் கொரானா நோய் தாக்கியபோது நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
என்ன ஆனாலும் பரவயில்லை. நான் ஆப்ரிக்கா சென்று இதை பரப்பிவிடக்கூடாது என நினைத்தேன். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குள் நுழையும் போதே இறந்து விடுவேன் என்று தான் நினைத்தேன்.
கனவிலும் நான் பிழைப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இவருக்கு எச்.ஐ.வி. கிருமியை கொள்ளும் மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது. அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்ட முதல் ஆப்ரிக்க நபர் இவரே.
சிங்கப்பூர் ஜூலி
சிங்கப்பூரைச் சேர்ந்த ஜூலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளார். கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி காய்ச்சல் என நினைத்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டுள்ளார்.
ஆனால் நாள் முழுவதும் சோர்வுடன் காணப்பட்டு உள்ளார். அப்போது தும்மல் போன்ற அறிகுறிகள் இல்லை. 4-ம் தேதி எழுந்தவுடன் அறையே சுற்றுவது போல் இருந்ததாம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று இருப்பது இவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் இது குறித்து கூறியது என்ன?
நான்கு சுவர் மட்டுமே என்னைச் சுற்றி இருக்கும். போன் கொடுத்தனர். யாரிடம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் எனக் கூறினர்.
ஆனால் நேரில் யாரையும் சந்திக்க முடியவில்லை. சுவரை உடைத்துக்கொண்டு அருகில் உள்ளவரிடம் பேசலாமா என்று கூட நினைத்தேன்.
அருகில் இருக்கும் கழிவறைக்குக்கூட என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. அந்த அளவிற்கு தீவிரமாக கொரோனா என்னை பாதித்தது எனக் கூறியுள்ளார்.