ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் கொரோனாவை குணப்படுத்துமா? பிரதமர் மோடியை மிரட்டி டிரம்ப் கேட்க காரணம் என்ன?

Hydroxychloroquine

ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் Hydroxychloroquine கொரோனாவை குணப்படுத்துமா? பிரதமர் மோடியை ட்ரம்ப் மிரட்டி கேட்க காரணம் என்ன? ஹைட்ரோக்ஸி குளோரோகுயின் என்றால் என்ன?

சில நாட்களுக்கு முன் ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மருந்து அமெரிக்காவிற்கு வேண்டுமென்று டிரம்ப், மோடியிடம் கேட்டிருந்தார்.

இந்தியாவில் இந்த வகை மருந்துகளை ஏற்றுமதி செய்வதை ஏற்கனவே தடை செய்து விட்டனர். இதனால் இந்தியாவிடம் இருந்து எந்த பதிலும் கூறப்படவில்லை.

நேற்று டிரம்ப் திடீரென்று இந்தியா மருந்து அனுப்பாவிட்டால் பரவில்லை. ஆனால் அதற்கு நாங்கள் பதிலடி கொடுக்கும் நாள் வரும் என கூறிவிட்டார்.

உண்மையில் அந்த ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மருந்து என்பது என்ன? அதற்கு கொரோனாவை குணப்படுத்தும் சக்தி இருக்கிறதா?

ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் என்றால் என்ன?

இது மலேரியாவை குணப்படுத்தும் மருந்து ஆகும். குளோரோகுயின் மருந்தை விட வீரியம் குறைந்ததாகும் இது மற்றொரு மலேரியா மருந்து.

வெவ்வேறு விலை மற்றும் தரத்துடன் இது அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  எஃப்‌டி‌ஏ-வால் அனுமதிக்கப்பட்டாலும் கொரோனா சிகிச்சைக்கு உகந்த மருந்து இது இல்லை.

ஏன் டிரம்ப் ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் கேட்கிறார்

பிரான்ஸ் நாட்டில் 40 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் பாதிக்கு மேற்பட்டோருக்கு உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாம்.

மருத்துவ வல்லுனர்கள் இது தரம் குறைந்த ஒரு ஆய்வு என எச்சரித்துள்ளனர். பிரான்ஸ் ஹெல்த் மினிஸ்டர் இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

இந்த மருந்து கோவிட் 19 வைரஸ்க்கு பின் செயல்படும் சார்ஸ் cov-2 வைரஸ் செயல்பாட்டை முழுவதும் தடை செய்யுமாம். இதனால் இந்த வைரஸ் உடல் பாகங்களின் அணுக்களில் செல்வதை தடை செய்யும்.

வழக்காமான கொரோனா சிகிச்சைக்கும் உடலில் முன்னேற்றம் தெரிய எடுத்துக்கொள்ளும் கால அளவு ஏறத்தாழ ஒரே அளவு தான்.

மேலும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட ஒரு நோயாளிக்கு உடல்நிலை மிகவும் மோசமானதாக ஆனது. மீதம் நான்கு பேருக்கு சிறுநீரக செயல் இழப்பு, வயிற்று போக்கு ஆகியவை ஏற்பட்டுள்ளது.

இது மிகவும் விரைவான காலத்தில் நாம் இந்த மருந்தை கொரோனாவிற்காகன சரியான மருந்து என்று சொல்லி விட முடியாது.

ஐரோப்பா மருத்துவத்துறை ஆய்வை தவிர வேற எந்த கொரோனா நோயாளியும் இந்த மருந்தை உபயோகிக்க கூடாது என எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.