129 இந்திய மாணவ, மாணவிகளை வலைவிரித்துப் பிடித்த அமெரிக்கா
அமெரிக்காவில் போலியாக குடியேறும் நபர்கள் அல்லது குடியேற விரும்பும் நபர்களை கண்டறிய அமெரிக்கா சிறப்புப் பிரிவை வைத்துள்ளது.
இந்த அமைப்பின் மூலம், போலியான கல்லூரியைத் துவங்கி வெளிநாட்டில் உள்ளவர்களின் பார்வைக்கு விடும்.
அமெரிக்காவில் மாணவ விசாவில் சட்டவிரோதமாக குடியேறலாம் என ஆசை வார்த்தை கூறி இருக்கும்.
சம்பந்தப்பட்ட இணையதளமும், பார்த்தவுடன் நம்பும் படியாக வகுப்பறை, ஆசிரியர்கள், மாணவர்கள் என புகைப்படங்களுடன் இருக்கும்.
இது உண்மையான, போலிஏஜெண்டுகளின் வேலை என நம்பி அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக சென்ற 129 இந்திய மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளனர். அதை நடத்துவதே அமெரிக்கா தான் என விளக்கமும் கொடுத்துள்ளனர்.
இந்திய அரசு இதற்கு கடும் கண்டம் தெரிவித்துள்ளது. மாணவர்களை யாரோ தவறாக வழிநடத்தி பதிவுசெய்ய வைத்திருக்கலாம் எனக்கூறியுள்ளது.
மேலும், இந்திய தூதர் மாணவர்களைச் சந்திக்க அனுமதியளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளது.
இனியாவது எந்த நாட்டிற்கும் மக்கள் சட்டவிரோதமாக நுழையும் எண்ணத்தை கைவிடவேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.