Home நிகழ்வுகள் உலகம் 20 வருடங்களில் மொத்தம் 5 தொற்று நோய்கள் பரப்பிய சீனா: அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்

20 வருடங்களில் மொத்தம் 5 தொற்று நோய்கள் பரப்பிய சீனா: அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்

20 வருடங்களில் மொத்தம் 5 தொற்று நோய்கள்

வாசிங்டன்: கடந்த 20 வருடங்களில் மொத்தம் 5 தொற்று நோய்கள் சீனாவில் உருவாகி உள்ளது மற்றும் இது எப்படியாவது நிறுத்தியாக வேண்டும், என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓ’பிரையன் தெரிவித்துள்ளார்.

மேலும் உலகம் முழுதும் 2,50,000 மக்களை கொன்ற கொரோனாவை பரப்பியதற்கும் சீனாதான் பொறுப்பு என அவர் தெரிவித்தார்.

உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் சீனாவை நோக்கி “நாங்கள் சீனாவிலிருந்து உற்பத்தியாகும் தொற்று நோய்களை பொருத்து கொள்ள மாட்டோம்”, எனக் கூறும் நிலை வரும்.

அது ஆய்வு கூடங்களில் இருந்தாலும் சரி அல்லது கடைத்தெருவில் இருந்தாலும் சரி இரண்டும் ஆபத்தே என அவர் செவ்வாய்கிழமை வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த 20 வருடங்களில் 5 தொற்று நோய்கள்

“நாம் சீனாவிலிருந்து கடந்த 20 வருடங்களில் 5 தொற்று நோய்கள் பரவ கண்டுள்ளோம். சார்ஸ், ஏவியன் ப்ளு, பன்றி காய்ச்சல், கொரோனா இன்னும் எத்தனை நாள் இத்தகைய மக்களை பாதிக்கும் கொடிய நோய்களை, சீனா இந்த உலகிற்கு பரப்பும்” என அமெரிக்காவின் உயர் அதிகாரி கூறினார்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா

மேலும் அவர் கூறுகையில் 2,50,000க்கும் அதிகமான மக்கள் உலக அளவில் இந்த கொரோனா பரவலால் இறந்துள்ளனர் மற்றும் 40 இலட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அமெரிக்காவில் மட்டும் 80,000 இறப்புகள் மற்றும் 1.4 மில்லியன் பாதிக்கப்பட்டோர் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“உலகப் பொருளாதாரம் முடங்கியுள்ளதாகவும், மற்றும் இவ்வாறு நடப்பது முதல் முறை அல்ல கடந்த 20 வருடங்களில் இது 5 ஆவது முறை ஆகும்.

இதை சீனா நிறுத்த வேண்டும். சீனாவிற்கு உலகில் மற்ற நாடுகளிலிருந்து உதவி தேவைப்படுகிறது, சீனாவிற்கு உதவ நாங்கள் தயார். இதனால் மீண்டும் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்”, என ஓ’பிரையன் தெரிவித்தார்.

Previous articleமாஸ்டர் உண்மையின் பிரதிபலிப்பு: யார் அந்த நபர்? சர்ப்ரைஸ் தகவல்!
Next articleவிஜய்யின் வீர செயல்: ஒரேயொரு Phone Call தான்: பாதுகாப்பாக சென்னை வந்த 11 பெண்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here