பாக்கிஸ்தானில் விமானி ஆனர் முதல் ஹிந்துவான ராகுல் தேவ். இவர் சிந்து மாகாணத்தின் மிகப்பெரிய மாவட்டமான தார்பர்க்கரைச் சேர்ந்தவர்.
இஸ்லாமாபாத்: பாக்கிஸ்தான் நாட்டின் வரலாற்றிலேயே முதன் முதலில் ஒரு ஹிந்து விமானி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்நாட்டின் விமானப்படையில் பொது கடமை விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தார்பர்க்கரைச் சேர்ந்த ராகுல் தேவ், பாகிஸ்தான் விமானப்படை விமானியாக நியமிக்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் ஊடகமான IANS தெரிவித்துள்ளது. கணிசமான தொகையிலான இந்துக்கள் தார்பர்க்கர் பகுதியில் வசிக்கின்றனர்.
அனைத்து பாகிஸ்தானிய இந்து பஞ்சாயத் செயலாளர் ரவி தவானி, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பலர் சிவில் மற்றும் ராணுவ சேவைகளில் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது விமானப்படையில் ராகுல் தேவ் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. தேவ் போன்று இன்னும் பலர் நாட்டிற்கு சேவை செய்ய தயாராக உள்ளனர். என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அவ்வப்போது இந்துக்களுக்கு எதிராக கட்டாய மதமாற்றம் மற்றும் கட்டாய திருமணங்கள் என பல செய்திகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.
தேவ் புகைப்படத்தை சமீபத்தில் ட்விட்டரில் பகிர்ந்து PAF (Pakistan Air Force) செய்தி வெளியிட்டது. கடந்த புதன்கிழமை பாகிஸ்தானின் ரேடியோ ஒன்று செய்தி தெரிவித்தது.
பாக்கித்தானின் வரலாற்றிலே முதன் முறையாக ஹிந்து மதத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விமானப்படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த வானொலியில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வருடம் கைநாத் ஜுனைத் என்ற பெண் போர் விமான பயிற்சியில் சேர்க்கப்பட்டார். இவர் பாகிஸ்தானின் கைபர்-பக்துன்வா மாகாணத்தை சேர்ந்தவர். இவரது தந்தை PAF-ல் படைத்தலைவராக உள்ளார்.
PAF-ன் ஜெனெரல் டூட்டி பைலட்டுக்கான தேர்வில் முதலிடம் பெற்று, பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானியாக தேர்ந்தேடுக்கப்பட்டார்.