டிரம்ப் இந்தியா வருகை; பிரதமர் மோடி டிரம்பை அழைத்தது ஏன்?
புதுடெல்லி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் 24 மற்றும் 25ல் இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
ட்ரம்பின் இந்திய வருகை
2018ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களை இந்தியா வருமாறும் குடியரசு தின விழாவில் சிறப்பு உறுப்பினராக கலந்து கொள்ளும் படியும் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் அதற்கான வாய்ப்புகள் சரிவர அமையாத நிலையில் மீண்டும் கடந்த நவம்பர் மாதம் இந்தியா வருமாறு மோடியால் அழைக்கப்பட்டார்.
அதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியா வருவார் என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமரின் அழைப்புக்கு ட்ரம்ப் பதில்
கடந்த நவம்பர் மாதம் இந்தியா பிரதமர் மோடியின் கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அளித்த பதில் ” அவர் நான் இந்தியா வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நான் இந்தியா சென்று வருவேன்” என்பதாகும். அதற்க்கான நேரம் இப்போ தான் வந்துள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடுகள்
ட்ரம்பின் இந்தியா வருகையை ஒட்டி அகமதாபாத்தில் மோடியின் தலைமையில் பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்றிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ட்ரம்ப் தங்குவதற்கான ஏற்பாடுகள் ITCமயூரா ஹோட்டலில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப் வருகையை ஏன் இந்தியா எதிர்பார்க்கிறது
ட்ரம்ப் இந்தியா வருகையின் போது இந்தியா அமெரிக்கா இடையான உறவு பலப்பெறும் என்பது மட்டுமன்றி வர்த்தக ஒப்பந்தம் குறித்த முடிவு எடுக்கப்படும் என்பதேயாகும்.
கடந்த ஆண்டு திரும்பப்பெறப்பட்ட இந்தியாவிற்கான வர்த்தக சலுகைகளை மீட்டெடுக்கும் நோக்கமாகவும் இருக்கலாம் இந்த பயணம்.
மேலும் சீனா மற்றும் ஈரான் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
இருப்பினும் இந்த தேதியும் இன்னும் சரிவர உறுதிப்படுத்தப்பட்டவில்லை. ஐ.நா.வில் பாகிஸ்தான் ஆர்டிகள் 370ன் படி பிரச்சனை ஆரம்பிக்க உள்ள நிலையில் ட்ரம்ப் இந்திய வருகைக்கான தேதி நேரம் மாற்றியமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.