உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் மொத்தம் 1692 பேர் மரணமடைந்துள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், 100 நாடுகளுக்கு மேல் பரவி 20000க்கும் மேற்பட்ட மக்களை பலியாக்கி, பல லட்சத்திற்கு மேல் மக்களை பாதிப்படையச் செய்துள்ளது.
இந்திய பிரதமர் மோடி, 21 நாள் சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்தியாவசிய பொருளை வாங்க மட்டும் மக்கள் வெளியே வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்திய நிலையில், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.
நாளொன்றுக்கு சராசரியாக 500 பேருக்கும் மேல் பலியாகிவருகிறார்கள்.
இதைக் கட்டுக்குள் கொண்டுவர அந்த நாட்டு அரசாங்கங்கள் பல முயற்சிகள் எடுத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
பாதிப்படைந்த மக்களில் சீனாவை விட அமெரிக்கா முன்னிலை பெற்றது.
நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் 919 பேரும், ஸ்பெயினில் 773 பேரும் பலியாகியுள்ளனர். மொத்தமாக ஆயிரத்து 792 நபர்கள் ஆவார்கள்.
இந்த வைரஸில் அதிக பலியாகிய நாட்டில் இத்தாலி இதுவரை 9134 மக்களை இழந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் இதுவரை 5138 மக்கள் இறந்துள்ளனர்.
சீனாவை விட இந்த இரண்டு நாடுகளிலும் இழப்பு அதிகமாக உள்ளது பல நாட்டு அரசிடம் உதவி கோரியுள்ளது.
தற்போது இந்த வைரஸ் எதிர்கொள்ள இந்தியா ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது.
இத்தாலியில் தற்போது வயதானவர்களை கொரோனா வைரஸ் தாக்கியிருந்தால் அவர்களை அந்த நாட்டு மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்து வருகிறது என தகவலும் வெளியாகியுள்ளது.