நியூயார்க்: யூஎஸ்ஸில் கோவிட்-19 பரவலின் மையப்புள்ளி ஆக மாறிய நியூயார்க் நகரம். இப்போது மட்டும் 100000-த்திற்க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது சீனா மற்றும் யுகேயில் உள்ள அதிகாரப்பூர்வமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விட அதிகம்.
நியூயார்க் நகர அரசு தரவுகளின்படி, ஞாயிற்று கிழமை மட்டும் 5,695 பேர் புதிதாக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்,
ஆக மொத்தமாக ஏப்ரல் 12 வாக்கில் 104,410 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் மற்றும் 27,676 மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
நகரத்தின் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,898 ஆக தற்பொழுது உள்ளது.
யூஎஸ் ஸில் தற்பொழுது வரை 557,300 பேர் பாதிக்கப்பட்டும் 22,000 க்கும் அதிகமான மக்கள் இறந்தும் உள்ளனர்.
உலக அளவில் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1.8 மில்லியனாக உள்ளது மற்றும் 1,14,185 மக்கள் இந்நோயால் இறந்துள்ளனர்.
யூஎஸ்ஸில், 202,200க்கும் அதிக மக்கள் நியூயார்க் மாகணத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 10,834 பேர் மரணம் அடைந்துள்ளார்கள்.
கடந்த வாரம் “மிக மிக கடினமான” சூழலை மருத்துவமனைகளில் சந்தித்ததாக நியூயார்க் நகர தலைவர் பில் டே பிலாசியோ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.
“ மற்றும் நாங்கள் எதிர்கொள்ளும் இத்தகைய எதிரியை எப்போதும் குறைவாக எண்ணமாட்டோம். கொரோனா வைரஸ் என்பது வரலாறு காணாத கடுமையான சவால்களை எங்கள் முன் நிறுத்தியுள்ளது.
மற்றும் உறுதியாக இதுபோன்ற நிலைமையை இந்த நுற்றாண்டில் எப்போதும் கண்டதில்லை”. என அவர் தெரிவித்தார்