Home நிகழ்வுகள் உலகம் சீனாவின் வுகான் நகரம் பலி எண்ணிக்கை 50% அதிகரிப்பு!

சீனாவின் வுகான் நகரம் பலி எண்ணிக்கை 50% அதிகரிப்பு!

338
0

சீனா:  வுகான் நகரத்தித்தில் இருந்து உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவியது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சீனா ஏற்கனவே இந்த நகரத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,579 ஆக தெரிவித்திருந்த நிலையில் இப்போது திருத்தம் செய்யப்பட்டிப்பதாகவும்

வுகான் பலி எண்ணிக்கை 50% அதிகம்

விடுபட்ட எண்ணிக்கையை சேர்த்து வுகான் நகரத்தில்  இப்போது  3,869 ஆக பலி  எண்ணிக்கை உள்ளதாகவும்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 50 சதவிகித உயர்வாகும்.

ஏற்கனவே பலி எண்ணிக்கை தொடர்பாக உலக நாடுகள் சீனாவின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த தகவலை சீனா இன்று வெளியிட்டு உள்ளது.

இந்த தகவல் திருத்தத்திற்கு காரணம் மருத்துவமனைக்கு வெளியில்  ஏற்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு தகவல்களை சேகரிக்க ஏற்பட்ட காலதாமதம் மற்றும்

தற்காலிக மருத்துவமனை, தனியார் மருத்துவமனை போன்றவர்களிடமிருந்து  தகவல் சேகரிக்க ஏற்பட்ட தாமதமே என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் 11 மில்லியன் மக்கள்வசிக்கும் இந்த நகரத்தில்  பல மாதங்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது

மட்டுமல்லாமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணத்தினால் தான் கோரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Previous articleLoversகளுக்கு முன்னுதாரணம் தல அஜித் – ஷாலினி ஜோடி!
Next articleகிங் பட காமெடியை பதிவிட்டு வாழ்த்து சொன்ன வடிவேலு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here