துபாய்: புற்றுநோயிலிருந்து தப்பிய ஷிவானி, கடந்த ஏப்ரல் 1 ம் தேதி அல் புட்டெய்ம் ஹெல்த் ஹப்பில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
துபாயில் நான்கு வயது இந்திய குழந்தை ஷிவானி, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ உதவியுடன் மீண்ட நிலையில், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தபோதிலும், கடந்த வாரம் கொரானாவிலிருந்தும் மீண்டுள்ளார்.
ஷிவானி, ஐக்கிய அரபு நாடுகளில் கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்ட இளம் வயதினரின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்று ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அல் பியூட்டைம் ஹெல்த் ஹப் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
அவரின் தாயார் ஒரு முன்னிலை சுகாதார ஊழியராக இருந்த நிலையில் அவர் மூலமாக ஷிவானி நோய் தொற்றிற்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் தந்தைக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவருக்குமே நோய் தொற்றின் அறிகுறிகள் இல்லாமலே நோய் தாக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஷிவானிக்கு ஏற்கனவே சிறுநீரக கேன்சர் (ganglioneuroblastoma) இருந்து அதிலிருந்து அவர் மீண்டுள்ளதால் அவருக்கு சிறப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
“ஷிவானிக்கு கடந்த ஆண்டு கீமோதெரபி சிகிச்சை செய்யப்பட்டது. எனவே, அவரது நோயெதிர்ப்பு சக்தி இன்னும் பலவீனமாகவே இருந்தது. கொரோனா நோயின் கடுமையான தாக்குதல் அதிக ஆபத்து என்பதால் மருத்துவர்கள் கவலை கொண்டிருந்தனர்.
எனவே, நாங்கள் அவளை நெருக்கமான கண்காணிப்பில் வைத்திருந்தோம். அதிர்ஷ்டவசமாக, அவருக்கு தொற்றுநோய் எந்த சிக்கல்களையும் உருவாக்கவில்லை,.” என்று மருத்துவமனை இயக்குனரும் ஷிவானிக்கு சிகிச்சை அளித்த குடும்ப மருத்துவ ஆலோசகருமான மருத்துவர் தோல்பிகர் அல் பாஜ் கூறினார்.
20 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் நோய் தொற்று முடிவுகள் இருமுறை நெகடிவ் என வந்த பின்னரே அவர் வீட்டிற்க்கு அனுப்பப்பட்டார்.
இருப்பினும் இன்னும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிவானியின் தாயாருக்கும் சிகிச்சை முடிந்த நிலையில் அவரும் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
UAE-ல் கோரோனாவிலிருந்து மீண்டவர்களில் மிகவும் சிறிய வயது உள்ளவர் ஷிவானி என்பது குறிப்பிடத்தக்கது.