ஒரு சிறிய வெட்டுக்கிளியை சமாளிக்க 1000 கோடியா என திகைக்க வேண்டாம். வெட்டுக்கிளி தாக்கத்தால், ஒரு நாடே பட்டினியால் வாடிய கதையும் உண்டென்றால் நம்புவீர்களா.
ரஷ்யாவை பாதித்த வெட்டுக்கிளி
ஆம். ரஸ்யாவின் 1008-ம் ஆண்டில், இந்தவகை வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து ஒரு வருடமாக பட்டினிகிடந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் இந்த கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களை சூறையாடியுள்ளது.
அங்குள்ள விவசாய மக்கள் இந்த வெட்டுக்கிளி தாக்கத்தால் வருவாய் இழப்பு அடைத்துள்ளனர். இந்தியாவில் குஜராத் மாநிலத்திலும் இந்த வெட்டுக்கிளிகளின் பாதிப்பு இருப்பதை உணரமுடிந்தது.
இந்த வகையான வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் என்று கூறப்படுகிறது. இவை அடர்ந்த கரும் மழை மேகமாய் வந்து தாக்கும் என அவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.
வெட்டுக்கிளி அச்சுறுத்தல்
இந்தவகையன வெட்டுக்கிளிகளின் தாக்குதல், ஏமன், கிழக்கு ஆப்பிரிக்கா, ஈரான், வளைகுடா நாடுகளில் இந்த வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த பூச்சிகளின் தாக்கம் பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்லையோரப் பகுதிகளில் வெகுவா காணப்பட்டதையொட்டி, சீனா பாகிஸ்தானுக்கு உதவ தன் நாட்டு நிபுணர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி ஆய்வு செய்தது.
அதில் வாத்துகள் வெட்டுக்கிளிகளுக்கு எதிரானவை என ஆராய்ந்து, 1 லட்சம் வாத்துகளை அனுப்பிவைத்தது. வாத்துகள் கோழியைக் காட்டிலும் 3 மடங்கு பூச்சிகளை உண்ணும், இருப்பினும் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.
இந்நிலையில், கிழக்கு ஆப்பிரிக்காவின் பாலைவன வெட்டுக்கிளி தடுப்பு மையத்தின் தலைவர், ஸ்டீபன் ஜோகா கூறியுள்ளதாவது, ‘இந்த வெட்டுக்கிளிகளை அழிக்க வானிலிருந்து, தரையிலிருந்தும் ஒரு சேர பூச்சி மருந்து தெளிக்கப்படவேண்டும். அதற்கு போதிய விமானங்கள் தங்களிடம் இல்லை’ என தெரிவித்துள்ளார்.
எத்தோப்பியா மற்றும் கென்யா தரப்பில் இருந்து மொத்தம் 10 விமானிகள் இந்த பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இன்னும் 20 விமானங்கள் தேவை என அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான், இந்தியா, ஈரான், ஆப்கான் ஆகிய நாடுகளின் வேளாண் அமைச்சக காணொளி ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த வெட்டுக்கிளிகளின் பாதிப்பை தடுக்க கடந்த ஜனவரி மாத கணக்குப்படி 76 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த செலவு தற்போது 138 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அதாவது இந்திய ரூபாய் மதிப்புப்படி 1024 கோடி தேவைப்படும். இது குறித்து ஐ. நா. கவலை தெரிவித்துள்ளது.