மூன்றாம் உலகப்போர்: அமெரிக்கா போர் வேண்டாம் என முடிவு செய்துவிட்டது. ஈரான் நிலைப்பாடு என்ன என்பது உறுதியாகத் தெரியவில்லை.
சுலைமானி கொலை
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் நாட்டு ராணுவத் தளபதி சுலைமானி அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை ஏவுகணை வீசி தாக்கியது ஈரான். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
பொருளாதார நிபுணர்கள் கருத்து
போர் ஏற்பட்டால் இரு நாடுகளின் பொருளாதாரமும் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும். எனவே போர் அவசியமற்றது என பொருளாதார நிபுணர்கள் பலர் தங்கள் கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.
பிரதிநிதிகள் சபை
ஈரான் மீதான ராணுவ தாக்குதலில் ட்ரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிரான தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 224 பேர் வாக்களித்துள்ள நிலையில் போர் பதற்றம் சற்றே தணிந்துள்ளது.
மூன்றாம் உலகப்போர்
ஆனால் ஈரான் தனது ராணுவ தளபதியின் இழப்பிற்கு பதில் தாக்குதல் நடத்துமா?அல்லது கைவிடுமா? என இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
ஒருவேளை ஈரான் போர் தொடுப்பது என முடிவு செய்தால் நிச்சயம் பல நாடுகள் ஈரணியாகப் பிரியும். இதன்மூலம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது.