கொரோனாவால் அனைத்து உலகமும் ஸ்தம்பித்து நிற்கும் இந்த நேரத்தில், உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய வேறு சில முக்கியமான தடுப்பு மருந்துகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகளின் சபை எச்சரித்துள்ளது.
தடுப்பூசிகள் தட்டுப்பாடு
இந்த கொரோனா பரவலால் அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுளன. வான்வழி போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து என அனைத்தும் பல நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால் பல நாடுகளில் குழந்தைகளுக்கு தேவையான முக்கிய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது, என குழந்தைகளுக்கான ஐநா முகவரமைப்பு தெரிவித்துள்ளது.
இது அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான சரக்கு போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தி உள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்(UNICEF)
உலகெங்கிலும் தடுப்பூசி வழங்குவதே ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின்(UNICEF) முக்கிய பணியாகும். உலகத்தில் தட்டம்மை, இளம்பிள்ளைவாதம், டெடானஸ் போன்ற கொடிய நோய்களிடமிருந்து 30 இலட்சம் வரையிலான குழந்தைகளை தடுப்பூசிகள் காப்பாற்றி வருவதாக இந்த அமைப்பு தெரிவிக்கின்றது.
கொரோனாவை தடுக்க தடுப்பூசிகளை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் தீவிரம்காட்டிவரும் அதேவேளையில் இந்த உரடங்கு மற்ற நோய்களுக்கான மருந்துகளை வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
உதை கேட்டும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
“ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கொரோனா ஊரடங்கினால் முடங்கி கிடக்கும் கப்பல் போக்குவரத்து போன்றவற்றுக்கான விதிகளில் தளர்வு ஏற்படுத்தி தடுப்பூசிகளுக்கான உதவிகளை வழங்குமாறு ஒரு சில நாடுகளிடத்தில் உதவி கேட்டுவருகிறது,” என மாரிஷி மெர்காடொ தெரிவித்தார்.
மேலும் சில நாட்டின் அரசாங்கத்திடமும் இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையால் இந்த முக்கிய மருத்துவ தடுப்பூசிகளை வழங்குவதற்கு குறைந்தபட்ட செலவில் போக்குவரத்தை அனுமதிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்குவதற்கு முன்பே உலக அளவில் 2 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி தேவை இருப்பதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.