மஞ்சள் புயல் சென்னை சூப்பர் கிங்ஸ் சுழலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தரைமட்டமானது.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ஆரம்பத்தில் தடுமாற்றத்துடனே விளையாடியது. முதல் 10 ஓவரில் மந்தமாகவே ரன்கள் எடுத்தனர்.
அதன்பிறகு ரெய்னா, டூபிளசிஸ் ஆட்டம் சூடு பிடிக்க ரன்கள் வேகமாக சேர்ந்தது. டூபிளசிஸ் அவுட் ஆகியதும் தோனி களம் இறங்கினார். ஆட்டம் மேலும் அனல் பறந்தது.
இறுதியில் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 179 ரன்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா 59, தோனி 44, டூ பிளசிஸ் 39 ரன்கள் அதிகபட்சமாக அடித்தனர்.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது டெல்லி கேப்பிடலின் இளைஞர் படை கொண்ட அணி.
தொடக்கம் முதலே டெல்லி பேட்ஸ்மேன்கள் அதிர்ச்சி கொடுத்தனர். மஞ்சள் அணியின் சுழல் புயலில் சிக்கி சின்னபின்னமாகினர் டெல்லி பேட்ஸ்மேன்கள்.
16.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்து தரைமட்டமானது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் தனிமரமாக 44 ரன்கள் எடுத்தார். இம்ரான் தாகிர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும் அதிகபட்சமாக கைப்பற்றினர்.