கோவை: காலை 9 மணி முதல் 11 மணிக்கு இடைபட்ட நேரத்தில், கோயம்புத்தூரில் இருக்கும் 12 நிரந்தர மற்றும் 22 தற்காலிக சோதனைச்சாவடிகளில் கொரோனா ஊரடங்கு தொடர்பாக நடைபெற்ற வாகனச்சோதனைகளில் சிக்கிய வாகனங்களில் வண்ணம் பூசப்பட்டது.
கொரோனா ஊரடங்கையும் மீறி தேவை இல்லாமல் ஊர் சுற்றியதால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மஞ்சள் வண்ணம் பூசப்பட்டது.
வாகனத்தை பறிமுதல் செய்வோம்
மீண்டும் இதுபோல் போதிய காரணம் இல்லாமல் ஊர் சுற்றுவது தொடர்ந்தால் வாகனத்தை பறிமுதல் செய்வோம் என காவல் துறையினர் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
காவலர்கள் 1,788 இருசக்கர வாகனங்கள், 445 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 8 மூன்று சக்கர வாகனங்கள் மீதும் வண்ணம் பூசினர்.
வாகனங்களில் வண்ணம் நிறம் மாறும்
இதைப்போல் ஊரடங்கு முடியும் வரை சோதனை நடக்கும் என்றும் ஒவ்வொரு வாரமும் வண்ணத்தின் நிறம் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நோயின் தீவிரத்தை அரசு எவ்வளவு முயன்றாலுல் அது நம் கையில் தான் உள்ளது என்பதில் கவனமாக இல்லாவிடில் விரைவில் இந்நோயிலிருந்து மீள்வது கேள்விக்குறியாகிவிடும்.