#ஒரிஜினல்சங்கி_ஸ்டாலின் என்ற மோசமான ஹாஸ்டாக் ட்விட்டர் ட்ரெண்ட்ங் ஆகி வருகிறது. திடீரென ஏன் இந்த ஷாஸ்டாக் வைரலாகி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை; தமிழர்களை பொறுத்தவரை சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படக்கூடியவர்கள்.
வெகுஜன மக்களை விட ஒரு குழுவாக செயல்படுவார்கள் இங்கு ஏராளம். உதாரணமாக சினிமாவில் தொடங்கி அரசியல் வரை; சாதாரண நிகழ்வில் துவங்கி அசாதாரண நிகழ்வுகள் வரை ட்விட்டர் டிரெண்டிங் இடம் பிடிக்கிறது.
ஒருபுறம் மீம் கிரியேட்டர் யாராவது ஒருவர் சிக்கிவிட்டால் அவரை மீம் செய்தே ட்ரெண்ட்டிங்கில் கொண்டு வந்துவிடுவார்கள்.
இதே விஜய், அஜித் போன்ற பிரபலங்கள் பற்றி ஏதாவது ஒரு அப்டேட் என்றால் அவர்களை சேர்ந்த ரசிகர்கள் அதை ட்ரெண்ட் செய்ய துவங்குகின்றனர்.
இந்திய கிரிக்கெட் மேட்ச் என்றால் தமிழ் ரசிகர்கள் தனித்துவமாக ஒரு ட்விட்டர் ட்ரெண்ட் உருவாக்கி அதை ஹிட் செய்கின்றனர்.
அரசியல் கட்சிகள் தங்களுக்கு என்று ஒரு ஐடி விங் வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளனர்.
மோசமான ஹாஸ்டாக்
முதலில் சமூக வலைத்தள ட்ரெண்ட் என்பது ஒரு பிரபலம் சார்ந்த புகழை பரப்ப பயன்பட்டு வந்தது. அந்த நிலை தற்பொழுது மாறிவிட்டது.
தங்களுக்குப் பிடிக்காதாவரைப் பற்றி ஒரு மோசமான ஹாஸ்டாக் கிரியேட் செய்து அதை ட்ரெண்ட் செய்து சம்பந்தப்பட்ட நபருக்கு களங்கம் விளைவிக்கின்றனர்.
#GoBackModi என இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வரும்போது உலக அளவில் ட்ரெண்ட் செய்து நரேந்திர மோடிக்கு திமுக ஐடி விங் குடைச்சல் கொடுத்தது.
அதேபோல் சமீப காலமாக இதில் பல பிரபலங்கள் சிக்கியுள்ளனர். எனக்கு #ஒரு_நிமிஷம்_தலை_சுத்திருச்சு இது ரஜினுக்கு எதிராக ட்ரெண்ட் செய்யப்பட்டது.
இன்று #ஒரிஜினல்சங்கி_ஸ்டாலின் ஹாஸ்டாக் ஆகியுள்ளது. இது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கிரியேட் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஏன் இப்படி ட்ரெண்ட் ஆகிறது என்றால் இவை அவர்களுக்கு எதிரானவர்கள் தக்க சமயம் பார்த்தோ அல்லது ஏதேனும் ஒரு சம்பவத்தை தொடர்பு படுத்தியோ திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
இந்த ட்ரெண்ட்ங் கலாச்சாரம் தற்பொழுது நாகரீகம் இல்லாமல் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தும் அளவிற்கு ட்விட்டர் வலைத்தளம் சென்றுவிட்டது.