Home அரசியல் கருணாநிதியின் ஆருயிர் நண்பர் க.அன்பழகன் காலமானார்

கருணாநிதியின் ஆருயிர் நண்பர் க.அன்பழகன் காலமானார்

544
0

கருணாநிதியின் ஆருயிர் நண்பர் மற்றும் தி.மு.கவின் மூத்த தலைவருமான க.அன்பழகன் காலமானார். இவர் 98 வயது வரை வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூச்சுத்திணறல் காரணமாக பிப்ரவரி 25-ம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோடில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் உடல் நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருந்து வந்தது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அன்பழகனின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

கடந்த சில நாட்களாக செயற்கை சுவாசத்தில் சுவாசித்து வந்த அன்பழகன் நள்ளிரவு திடீரென காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Previous article7/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleIPL Corornavirus; கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐ‌பி‌எல் தடையா?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here