Home அரசியல் ரஜினி மக்கள் மன்றம்; மாவட்ட செயலார்கள் கூட்டம் சென்னையில் இன்று

ரஜினி மக்கள் மன்றம்; மாவட்ட செயலார்கள் கூட்டம் சென்னையில் இன்று

285
0

ரஜினி மக்கள் மன்றம்; மாவட்ட செயலார்கள் கூட்டம் சென்னையில் இன்று ‘

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினிகாந்த் தலைமையில் சென்னையில் இன்று நடக்கிறது.

அரசியலுக்கு வருவது உறுதி என்பதை சொல்லிக்கொண்டே இருந்த ரஜினி இப்போது ஒவ்வொரு படியாக எடுத்து வைத்துக்கொண்டே வருகிறார்.

ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றாமாக மாற்றி இப்பொழுது மாவட்ட மக்கள் மன்ற கூட்டத்தை நடத்தி சில முக்கிய தகவல்களை பரிமாறிக்கொள்ள உள்ளார்.

சமீபத்தில் முஸ்லீம்கள் ரஜினியை சந்தித்து சி‌ஏ‌ஏ, என்‌பி‌ஆர், சி‌ஏ‌பி ஆகிய சட்ட திருத்தங்களால் வரும் விளைவுகளை பற்றி பேசினார்கள்.

அதன் பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாட்டின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் என்னால் ஆன அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்வேன்’ என்று ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார்.

அதேநேரத்தில் அடுத்த மாதம் 14-ம் தேதிரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here