Home Latest News Tamil சீனா மீது மறைமுக போர் தொடுத்துள்ள இந்தியா – கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள்

சீனா மீது மறைமுக போர் தொடுத்துள்ள இந்தியா – கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள்

417
0

Blanket Ban : தற்போதைய இந்தியா பொருளாதார சிக்கல்களை சீனா அதற்கு சாதகமாக பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக Blanket Ban போட்டுள்ளது இந்தியா.

கொரோனாவால் நாடு முழுவதும் அனைத்து வர்த்தகம் மற்றும் வணிகமும் முடங்கி கிடக்கிறது.

உலகில் முதன்முதலாக சீனாவில் தோன்றிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவினாலும், சீனா இந்த நிலையினை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

அதன்பின் கொரோனா உலகநாடுகளின் வர்த்தகத்தை பாதிக்கத்தொடங்கியதை பார்த்த சீனா, இந்த சூழ்நிலையை சாதகமாக்க தொடங்கியது.

பொருளாதார இழப்பால் பல நிறுவனங்கள் போராடும் நிலையில், சீனா பல நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் முதலீடு செய்ய துவங்கியுள்ளது.

இதன்மூலம் பல நாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்கள் அனைத்துமே சீனாவிற்கு சொந்தமாக வாய்ப்புள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கையினை நேரடியாக ஜப்பான் போன்ற நாடுகள் எதிர்த்தாலும், சீனா தொடர்ந்து இந்த செயலை செய்துகொண்டே இருக்கிறது.

இதனை பார்த்த இந்தியா, சீனாவை இந்தியாவில் நுழையவிடக்கூடாது என ஒரு சூசகமான ஒரு நடவடிக்கையினை எடுத்துள்ளது.

FDI எனப்படும் Foreign Direct Invesment எனும் வெளிநாட்டு முதலீட்டில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

Blanket Ban எனப்படும் தடையினை இந்திய பொருளாதாரத்தில் போட்டுள்ளதால், வெளிநாட்டவர் யாரும் இந்திய கம்பெனியில் முதலீடு செய்ய இயலாது.

இதன்மூலம் இந்தியா சீனா மீது மறைமுக போர் புரிய தயாராகியதாக பல வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Previous articleநாளை முதல் அனைத்தும் இயல்புநிலைக்கு திரும்பும் – கேரள முதலமைச்சர் அதிரடி
Next articleவாழைத்தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் – போலீஸை பார்த்ததும் தெறித்து ஓட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here