Home ஆன்மிகம் தமிழ் புத்தாண்டு 2020: Tamil New Year 2020 எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

தமிழ் புத்தாண்டு 2020: Tamil New Year 2020 எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

1327
1
தமிழ் புத்தாண்டு 2020: தமிழ் வருடப்பிறப்பு ஏப்ரல் 13, 7:20 மணிக்கு பிறக்கிறது Tamil New Year 2020

தமிழ் புத்தாண்டு 2020: Tamil New Year 2020 எவ்வாறு கணக்கிடப்படுகிறது? சித்திரை திருநாள் எப்படி வந்தது? விஷூ புண்ணிய காலம் என்றால் என்ன?

தமிழ் புத்தாண்டு 2020: Tamil New Year 2020

தமிழ் ஆண்டுக் கணக்கானது வானியல் மற்றும் அறிவியல் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. சூரியனின் இயக்கத்தை வைத்தே ஒரு ஆண்டை தமிழர்கள் கணக்கிடுகின்றனர்.

பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர 365 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடங்கள், 48 நொடிகள் ஆகும். இதுவே ஒரு வருடமாக கூறப்படுகிறது.

சூரியனின் ராசி சஞ்சாரத்தை வைத்தே மாதங்கள் துவங்குகின்றது. அதன் அடிப்படையில் தான் தமிழ் வருட பிறப்பும் வருகின்றது.

மேலும் சூரியன் ஒவ்வொரு இராசியிலும் தங்கி இருக்கும் காலத்தை வைத்தே ஒவ்வொரு மாதத்தின் தினங்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுகின்றது.

தமிழ் வருட பிறப்பு கணக்கீடு

ராசி மண்டலத்தில் மொத்தம் பன்னிரண்டு ராசிகள் உள்ளன. இந்த பன்னிரண்டு இராசியிலும் சூரியன் ஓராண்டில் சஞ்சரிக்கிறார்.

இராசிகளில் முதல் இராசியான மேஷ ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்யும் நாளே வருட பிறப்பாகும். இதனை சமஸ்கிருதத்தில் மேஷ சங்கராந்தி என்று கூறுகின்றனர்.

தமிழர் கணக்கில் இது இளவேனிற்கால துவக்கமாகும். தமிழ் மாதங்களில் சித்திரை மாத பிறப்பாகும். சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

மேலும் தமிழ் நாட்காட்டியானது சீரானதாகவே இருக்கும் ஆங்கில நாட்காட்டி நாட்களை போன்று வருடத்திற்கு வருடம் எண்ணிக்கை மாறி அமையாது.

உதாரணத்திற்கு லீப் வருடம் போன்ற ஒன்று தமிழ் வருட கணக்கில் இல்லை. தமிழ் நாட்கள் சூரியனின் குறிப்பிட்ட இராசியில் தங்கும் காலத்தை மையமாக வைத்து கணிக்கப்படுகிறது.

சமஸ்கிருதத்தில் மொத்தமாக அறுபது வருடங்களுக்கு பெயர்கள் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு பெயரில் பிறக்கின்றது.

ஆங்கில மாதத்தில் ஏப்ரல் 13, 14 அல்லது 15-ஆம் தேதிகளில் மாறி மாறி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. ஏனெனில் ஆங்கில நாள்காட்டி சீரானதாக இருக்காது.

ஆங்கில நாட்காட்டியில் லீப் நாள் கணக்கிடப்படுகிறது. ஆனால் தமிழ் நாட்காட்டி அப்படி இல்லை துல்லியமாக கணக்கிடப்படுகிறது.

தமிழ் மாத பிறப்புக் கணக்கீடு

முற்காலத்தில் இரண்டு வகையான மாத கணிப்புகள் இருந்துள்ளன. ஒன்று சூரியனின் இயக்கத்தை வைத்தும். மற்றொன்று சந்திரனின் இயக்கத்தை வைத்தும் கணக்கிடப்படுள்ளன.

பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் என்பதை பார்த்தோம். மேலும் சூரியனின் சுற்று பாதையானது பூமியை மையமாக கொண்டு 12 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த 12 பகுதிகளும் 30 பாகை அளவுள்ளது. இதுவே 12 ராசிகள் கொண்ட ராசி மண்டலம் ஆகும். குறிப்பிட்ட காலங்கள் ஒவ்வொரு இராசியிலும் சூரியன் தங்குவதே சூரிய மாதங்கள் ஆகும்.

சூரிய மாதத்தில் சந்திரன் பூர்ணத்துவம் (பௌர்ணமி) அடையும் நாளை வைத்தே சந்திர மாதம் கணக்கிடப்படுகிறது.

சந்திரன் மேஷ மாதத்தில் சித்தரை நட்சத்திரத்தில் பூர்ணத்துவம் அடைகிறான். எனவே சந்திர மாதம் சித்திரை என குறிப்படுகிறது. தமிழகத்தில் இந்த சந்திர மாத பெயர்களையே தமிழ் மாத பெயர்களாக உள்ளன.

விஷூ புண்ணிய காலம்

விஷூ புண்ணிய காலம் என்பது பகல் பொழுதும் இரவு பொழுதும் சமமான அளவு நேரத்தை பெற்றிருப்பது விஷூ புண்ணிய காலம் எனப்படுகிறது.

இது மேஷ மாதமான சித்திரை மாதத்திலும் துலா மாதமான ஐப்பசி மாதத்தில் முதல் நாள் வருகின்றது. இதுவே விஷூ புண்ணிய காலமாகும். எனவே சித்திரை முதல் நாள் விஷூ கனி பூஜைகள் கோவில்களில் நடத்தப்படுகின்றது.

தமிழ் மாதப் பெயர்கள்

(சூரியன் அடிப்படையில்)

நடைமுறை தமிழ் மாத பெயர்கள்

(சந்திரன் அடிப்படையில்)

இராசி நாள் நாடி விநாடி தற்பரை
மேழம் சித்திரை மேஷம் 30 55 32 00
விடை வைகாசி ரிஷபம் 31 24 12 00
ஆடவை ஆனி மிதுனம் 31 36 38 00
கடகம் ஆடி கடகம் 31 28 12 00
மடங்கல் ஆவணி சிம்மம் 31 02 10 00
கன்னி புரட்டாசி கன்னி 30 27 22 00
துலை ஐப்பசி துலாம் 29 54 07 00
நளி கார்த்திகை விருச்சிகம் 29 30 24 00
சிலை மார்கழி தனுசு 29 20 53 00
சுறவம் தை மகரம் 29 27 16 00
கும்பம் மாசி கும்பம் 29 48 24 00
மீனம் பங்குனி மீனம் 30 20 21 15
மொத்தம் 365 15 31 15

தமிழகத்தில் தமிழ் வருடப்பிறப்பு

தமிழகத்தில் பண்டைய காலத்தில் கார்காலத்தின் துவக்கமான ஆவணி மாதமே தமிழ் வருடப்பிறப்பு என இருந்தாக கூறப்படுகிறது. ஆனால் தமிழ் புத்தாண்டு ஆவணியில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் கிடையாது. மேலும் இவ்வழக்கம் மறைந்தும் போனது.

சங்க இலக்கியங்களான அகத்தியர் பன்னீராயிரம், நெடுநல்வாடை, கமலை ஞானபிரகாசரின் புட்ப விதி போன்ற நூல்கள் மேழ (மேஷம்) மாதமே முதல் மாதம் என கூறியுள்ளன.

திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்  

 – நெடுநல்வாடை

இதன் பொருள் வலிமை பொருந்திய கொம்பினை உடைய ஆட்டினை (மேஷம்) முதன்மையாகக் கொண்டு சூரியன் இயங்கும் வான் மண்டலம் என்பதாகும். எனவே தமிழர்கள் இன்றளவும் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டு 2020 சார்வாரி வருடப்பிறப்பு

இந்த வருடம் தமிழ் புத்தாண்டானது 36-வது வருடமான சார்வாரி என்ற பெயரிலே ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு 07:20 PM கிருஷ்ண பட்ச சஷ்டி திதியில் மூல நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில் தனுசு ராசியில் பிறக்கிறது.

இந்த சார்வாரி வருடத்தில் சென்ற ஆண்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மக்கள் அனைவரும் இன்புற்று வாழ இறைவனை பிராத்தனை செய்வோம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here