Home Latest News Tamil இன்றைய ராசிப்பலன்கள் பிப்ரவரி 4, 2020

இன்றைய ராசிப்பலன்கள் பிப்ரவரி 4, 2020

262
0
இன்றைய ராசிப்பலன்கள்: பிப்ரவரி 4, 2020

இன்றைய ராசிப்பலன்கள்: பிப்ரவரி 4, 2020

இன்றைய ராசிப்பலன்கள் : பிப்ரவரி 4, 2020 அன்றிற்கான 12 ராசிகளுக்கு உண்டான பலன்களும், அவர்களின் ராசியான நிறம் மற்றும் எண்களை கீழே காண்போம்.

மேஷம்

குடும்பத்தில் சந்தோஷ மனப்போக்கு அதிகரிக்கும். குழந்தைகள் மற்றும் மனைவியிடம் அன்பு பூணுவீர்கள். பொதுவாக வெற்றி சூழும் நாள்.

ரிஷபம் 

தன்மீதான கண்ணோட்டம் சிறப்பானதாக உயர்வானதாக அமையும். வழக்கு விவகாரங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சற்று உடல் உபாதைகளில் ஆட்படும் நாள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்

அக்கம் பக்கத்தினர், உடன் இருப்பவர்களிடம் கருத்து வேறுபாடு தோன்றலாம். மனம் ஏற்றத் தாழ்வு உடையதாக எதிலும் பிடிப்பில்லாதது போல் தோன்றும்.

கடகம் 

அலைச்சல் சிறது இருக்கும். இருப்பினும் எடுத்த காரியத்தை வெற்றியடையச் செய்துவிடுவீர்கள். செலவினங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களிடம் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

சிம்மம்

எதுவும் தாமதப்படும் நாள். பொறுமையைக் கைக்கொள்வது சிறந்தது. சில எதிர்ப்புகளை சமாளிக்கும் பக்குவம் பெறும் நாள்.

கன்னி 

நன்மைகள் விளையும் நாளாகக் காணப்படுகிறது. கவனத்துடன் எல்லா விஷயங்களையும் செய்து அசத்துவீர்கள். மேன்மக்களின் அன்பு, பாராட்டு, முக்கிய உதவி கிடைக்கும்.

துலாம்

தன்னம்பிக்கை தாலாட்டும் நாள். உங்கள் எண்ணங்கள் உறுதி பெறும். உற்சாகமும் தைரியமும் வாய்த்த சிறந்த நாளாக விளங்குகிறது.

விருச்சிகம் 

பணவரவு சரிசமமாக இருக்கும் நாள். வேலைபார்க்கும் இடத்தில் நல்ல ஊக்குவிப்பு கிடைக்கும். வியாபாரம் விருத்தியடையும் நாள்.

தனுசு

பிள்ளைகளால் மனம் மகிழும். குடும்பத்துப் பிரச்சினைகளுக்கு பேசி முடிவு எட்டப்படும். இன்பமும் துன்பமும் கலந்த நாளாக இந்தநாள் இருக்கிறது.

மகரம்

சுபகாரியத் தடை நீங்கி மங்களம் உண்டாகும் நாள். தைரியம் மேம்பட்டு மேலான அனுகூலம் அதிகரிக்கும் நாள். நினைத்த உதவிகள் கிட்டும்.

கும்பம் 

நன்றாக உழைக்க வேண்டிய நாள். உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டும். கலைதுறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்பப்புகளால் உள்ளம் பூரிக்கும்.

மீனம் 

எந்தக் காரியத்திலும் ஏதேனும் இடைஞ்சல் வரக்கூடும். செலவைக் கட்டுப்படுத்துவது நல்லது. அரசியலில் பிளவு ஏற்படலாம். அடுத்தவர்கள் மீதான அக்கறையை குறைத்துக் கொள்வது நல்லது.

Previous articleLUCID DREAM: கனவுகளை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது?
Next article550 கோடி மணி நேரம் விழுங்கிய டிக்டாக்: ஆப் அன்னி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here