Home ஆன்மிகம் யுகாதி 2021: யுகாதி திருநாளின் சிறப்புகள்!

யுகாதி 2021: யுகாதி திருநாளின் சிறப்புகள்!

352
0

யுகாதி திருநாள் 2021

யுகாதி திருநாள் 2021: யுகாதி என்றால் என்ன? யாரெல்லாம் யுகாதி கொண்டாடுகின்றனர்? எவ்வாறெல்லாம் யுகாதி கொண்டாடப்படுகிறது.

யுகாதி திருநாள்: உகாதி (அ) யுகாதி திருநாள் தெலுங்கு மற்றும் கன்னட வருட பிறப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

இது சந்திரமான நாட்காட்டி அடிப்படையில் யுகாதி வருடத்தின் முதல் தினமாகும். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் மாநிலங்களில் விமரிசையாக கொண்டாப்படுகிறது.

யுகம்+ஆதி = யுகாதி யுகத்தின் ஆரம்பம் என்ற பொருள்படுகிறது. பிரம்மன் இன்னறைய தினத்தில் தான் உலகை படைத்தார் எனக் கூறப்படுகிறது. சைத்ர மாதத்தின் முதல் தினமாகும்.

யுகாதி திருநாள் ஆங்கில மாதம் ஏப்ரல் முதல் வாரம் அல்லது மார்ச் கடைசி வாரம் வசந்த காலத்தில் வருகிறது. பூரண பிரதமை திதி தினமே யுகாதி திருநாள் ஆகும்.

யுகாதியன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து கொண்டு உற்றார் உறவினர்களுடன் அனைவரும் கொண்டாடுகின்றனர்.

யுகாதி பச்சடி:

யுகாதி பச்சடி என்பது அறுசுவையும் கலந்த ஒரு பச்சடி ஆகும். வேப்பம் பூ, வெல்லம், மாங்காய், உப்பு, புளி, காரம் என அனைத்தும் கலந்து செய்யப்படுகிறது.

ஒரு ஆண்டு என்பது இன்பம் மற்றும் துன்பம் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் என்பதையே குறிக்கிறது. மேலும் பூர்ண போளி என்கின்ற இனிப்பு பண்டம் சமைக்கின்றனர்.

இந்த நாளை மகாராஷ்டிராவில் குடி பாடவா என்றும், மணிப்பூரில் சாஜிபு நொங்மா பன்பா என்றும், சிந்து இன மக்கள் சேட்டி சந்த் என்றும் கொண்டாடுகின்றனர்.
தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் யுகாதி கொண்டாடுகின்றனர்.

யுகாதி 2021: 2021 ஆம் வருடம் ஏப்ரல் 13 ஆம் தேதி யுகாதி திருநாள் கொண்டாடப்படுகிறது. அனைவரும் இந்த நாளில் இன்புற்று இருக்க இறைவனை பிராத்தனை செய்து கொண்டு இத்திருநாளை கொண்டாடுவோம்.

Previous articleபேசாத குழந்தைகளை பேச வைக்கும் நிசும்பசூதனி என்கின்ற அம்பாயிரம்மன்!
Next articleசித்திரை கனி 2021: தமிழ் புத்தாண்டு விஷூ கனி காணுவதின் சிறப்புகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here