Home விளையாட்டு டெல்லியின் இளம் படை முதல் முறையாக கோப்பையை வெல்லுமா?

டெல்லியின் இளம் படை முதல் முறையாக கோப்பையை வெல்லுமா?

253
0
டெல்லியின் இளம் படை

2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் போட்டி இதுவரை 12 சீசன்கள் நடைபெற்றுள்ளது  இதுவரை டெல்லி அணி மற்றும் பெங்களூர் அணி கோப்பையை வென்றதில்லை,  வலுவான அணி என்பதில் சந்தேகமே இல்லை.

ஜாம்பவான்கள் விளையாடிய அணி

டெல்லி கேபிடல்ஸ் அணி இளம் வீரர்களை கொண்ட அபாயகரமான அணி, 2008ம் ஆண்டு சேவாக், கவுதம் கம்பீர் போன்ற வீரர்கள் இந்த அணியில் விளையாடினார் ஏபி டிவில்லியர்ஸ், ஜெயவர்த்தனே, தில்சன், ஜாகிர் கான், கிளன் மேக்ஸ்வெல், யுவராஜ்சிங், ஜேபி டுமினி, ராஸ் டெய்லர், கெவின் பீட்டர்சன் போன்ற பல ஜாம்பவான்கள் விளையாடியும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் ஹேடர்ஸ் என்று யாரும் கிடையாது என்பதே இந்த அணியின் சிறப்பு.

கவுதம் கம்பீர் கேப்டன்

2018 ஆம் ஆண்டு இந்த அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பேற்று விளையாடிய கவுதம் கம்பீர், தொடர்ந்து தோல்விகளை சந்தித்தார் தனது கேப்டன் பொறுப்பை ஸ்ரேயாஸ் அய்யரிடம் கொடுத்துவிட்டு ஆடும் லெவனில்  விளையாடாமல் அமர்ந்தார்.

அந்த வருடம் டெல்லி அணி லீக் போட்டியிலேயே வெளியேறியது.

2018 ஆம் ஆண்டு அந்த அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டார். அணியில் பல மாற்றங்கள் நடந்தது இளம் வீரர்களுக்கு ரிக்கி பாண்டிங் முக்கியத்துவம் கொடுத்தார்.

இளம்படை டெல்லி கேபிடல்ஸ்

ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, விஜய் சங்கர், அபிஷேக் வர்மா போன்ற வருங்கால இந்திய அணியே இந்த அணியில் தான் உள்ளனர்.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் வருகிற மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் டெல்லி அணி தங்களை தயார் படுத்தி வருகிறது

வரும் ஐபிஎல் இல் பல மாற்றங்களை செய்தது டெல்லி அணி

டெல்லி அணி வீரர்கள் விபரம்

பேட்ஸ்மேன்களாக ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்திவி ஷா, அஜிங்கிய ரஹானே, ஜாசன் ராய், சிம்ரன் ஹெட்மையர் போன்ற வீரர்கள் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்களாக மார்க்கஸ் ஸ்டோனீஸ், அக்சர் படேல், கீமோ பால், கிறிஸ் வோக்ஸ் போன்ற வீரர்கள் உள்ளனர்.

அஸ்வின், ரகானே வருகை

கீப்பர் களாக அதிரடி ஆட்டக்காரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் அலெக்ஸ் கேரி இருக்கின்றார்கள்.

பந்துவீச்சிலும் இந்த அணி வலுவாகவே உள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின், ரபாடா, அமித் மிஸ்ரா, இசாந்த் சர்மா, லிமிச்சேனே போன்ற வீரர்கள் உள்ளனர்.

ஸ்ரேயாஸ் அய்யர் சர்வதேச போட்டியில் முழு திறமையுடன் ஆடி வருகிறார், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை சிறப்பாகவே செய்து வருகிறார்.

இவருக்கு உறுதுணையாக முன்னாள் ஹைதராபாத் அணி கேப்டன் ஷிகர் தவான் போன்ற வீரர்கள் உள்ளனர்.
கடந்த வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த ரவிசந்திரன் அஸ்வின், இந்த வருடம் டெல்லி அணியில் இணைந்துள்ளார். அஜிங்கிய ரஹானேவும் ராஜஸ்தான் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக இந்த அணியில் மொத்தம் 4 கேப்டன்கள் விளையாட உள்ளனர்.
டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் விளையாடிய இந்த அணி 2019 ஆம் ஆண்டிலிருந்து டெல்லி கேபிடல்ஸாக மாறியது.

பல இளம் படைங்களைக் கொண்ட  இந்த அணி, இந்த தடவை கட்டாயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ஆடும் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை.

2008 ஆம் ஆண்டு சேவாக் இந்த அணியை மற்ற அணிகள் பயப்படும் அளவிற்கு உருவாக்கி வைத்திருந்தார்.  கடந்த ஐபிஎல் சீசன்களில் சென்னை அணி மற்ற அணிகளை விட டெல்லி அணியிடம் மட்டும்   போராடிய வெற்றி பெறும்.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தை மார்ச் மாதம் 30 ஆம் தேதி  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

டெல்லி அணிக்கும், பெங்களூர் அணிக்கும் ஐபிஎல் கோப்பை இந்த வருடமாவது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous articleடெஸ்ட் தரவரிசை: நியூஸிலாந்து 2வது இடத்திற்கு முன்னேற்றம்
Next articleசங்கர் மஹாதேவன் பிறந்தநாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here