Home விளையாட்டு இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்

இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்

614
0

மார்ச். 8: 7வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. 

பத்து அணிகள்

பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும்,

பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் லீக் போட்டியில் விளையாடியது

பிரிவு ‘ஏ’ வில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும், பிரிவு ‘பி’யில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது

அரையிறுதி ஆட்டங்கள்

மழைக்காரணமாக முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து போட்டி கைவிடப்பட்டது. புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்ததால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மற்றோரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி மோதின. டிஎல் முறைப்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்காவை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மெல்போர்னில் இறுதி போட்டி தொடங்கியது.

ஹீலி மற்றும் மூனி அதிரடி

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டகாரர்களாக அலெக்ஸா ஹீலி மற்று மூனி முதல் நான்கு ஓவர்களில் 38ரன்கள் எடுத்தனர்.

முதல் ஓவரில் தீப்தி பந்து வீச ஹீலி தூக்கி அடித்த பந்தை ஷாபாலி வர்மா கேட்சை தவறவிட்டார்.ராஜேவஸ்வரி யிம் ஹீலிக்கு மீண்டும் ஒரு கேட்சை தவறவிட்டார்.

இதை பயன்படுத்திக் கொண்ட ஹீலி அதிரடியாக ஆடி  39 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். மூனி தன் பங்குக்கு 54 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார்.

இந்திய பவுலர்கள் கணிசமாக ரன்களை வாரி வழங்கினார்கள் சிகா பான்டே 4 ஓவர்கள் பந்துவீசி 52 ரன்கள் கொடுத்தார். தீப்தி சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர். இவர்களை பிரிக்க இந்தியா 11 ஓவர்கள் எடுத்துக் கொண்டது.

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா வெற்றி

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முதல் ஓவரிலே ஷாபாலி வர்மா விக்கெட் இழந்தது, மூன்றாவது ஓவரில் ரோட்ரீக்ஸ் விக்கெட்டையும் இழந்தது. இரண்டாவது ஓவரில் பாட்டியா ரிடய்ரடு கட் செய்து வெளியேறினார்.

கவுர் மற்றும் மந்தனா

இந்த உலககோப்பை முழுவதும் இந்தியா கேப்டன் கவுர் மற்றும் மந்தனா பெரிதாக சோபிக்கவில்லை இதுவே இந்திமாவிற்கு பெரும் பின்னடைவு.

ஆஸ்திரேலியா அணியிடம் 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக உலககோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இந்தியா அணியில் ஷாபாலி 2, மந்தனா 11, கவுர் 4, ரோட்ரிக்ஸ் 0, தீப்தி சர்மா 33, கிருஷ்ணமூர்த்தி 19, கோஷ் 18 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்கள்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஷுட் 4 விக்கெட்டும் ஜோனேஸன் 3 விக்கெட்டும், மோலினெக்ஸ், கிம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

போராட்டமில்லாத இந்தியா

தோல்வியே சந்திக்காமல், அரையுறுதியில் ஃப்ரி பாஸில் வந்த இந்திய அணி,  பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ப்ஃல்டிங்கில் என எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் இந்தியா தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் பீல்டிங்கில் அற்புதமாக செயல்பட்டது வெளிப்படையாகவே தெரிந்தது அவர்கள் பந்தை தடுப்பதில் மிகவும் துள்ளியமாக செயல்பட்டனர்.

விருதுகள்

ஆட்டநாயகன் விருதை  39 பந்தில் 75 ரன்கள் எடுத்த அலிக்ஸா ஹீலி வென்றார். இவருக்காக இவருடைய கணவரும் ஆஸ்திரேலியா வீரரான மிட்சல் ஸ்டார்க் வருகை தந்து உற்சாகமூட்டினார்.

தொடர் நாயகன் விருதை பெத் மூனி வென்றார். ஆறு போட்டிகளில் 259 ரன்கள் குவித்து, 3 அரைசதங்களுடன் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார்.

இவர் கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் லீக் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்றவுடன் இந்தியாவின் 16 வயதே ஆன ஷாபாலி வர்மா கண்ணீர் விட்டு அழுதது பார்க்க கடினமாக இருந்தது.

இறுது போட்டிக்கு இதுவரை செல்லாத இந்திய அணி தற்போது முதல் முறை சென்றது மிகப்பெரிய வெற்றியே. தோல்வி ஒன்றும் பெரிது இல்லை, அடுத்த முறை நாம் வெல்வோம் என்று கடந்து செல்வோம்.

பிளிந்தா கிளார்க் கையில் இருந்து உலககோப்பையை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் லானிங் வாங்கினார்.

சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் சேர்த்து மொத்தம் 87000 மக்கள் மத்தியில் உலககோப்பை வாங்கி மகளிர் தினத்தை வெற்றியோடுக் கொண்டாடி வருகிறது ஆஸ்திரேலியா அணி.

Previous articleமகளிர் தின கொண்டாட்டத்தில் நயன்தாரா!
Next articleஇந்திய அணியில் மீண்டும் ஹர்திக் பான்டியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here