அண்டர் 19 உலகக்கோப்பை ஃபைனல்; வங்கதேசம் வரலாற்று வெற்றி
அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா அண்டர் 19 மற்றும் வங்கதேசம் அண்டர் 19 அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்தியா ஆல் அவுட்
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு திலக் வர்மா (38), ஜெஸ்வால் (88) மட்டும் கைகொடுக்க இந்திய அணி 47.2 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணிக்கு அவிஷேக் தாஸ் அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.
வங்கதேசம் நிதான ஆட்டம்
தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய வங்கதேசம் சில விக்கெட்டுகளை இழந்ததால் மிடில் மற்றும் லோ ஆர்டரில் மிகவும் பொறுமையாக ஆடியது. வங்கதேச அணி 41 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது.
இதையடுத்து போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வங்கதேச அணி 42.1 ஓவரில் வங்கதேச அணி 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
இதுவே வங்கதேசம் வெல்லும் முதல் ஐசிசி தொடர் ஆகும்.