Home Latest News Tamil புல்டாஸ் பால், மின்னல் வேக அடி; சுருண்டு விழுந்த திண்டா!

புல்டாஸ் பால், மின்னல் வேக அடி; சுருண்டு விழுந்த திண்டா!

561
0
புல்டாஸ் பால்

புல்டாஸ் பால், மின்னல் வேக அடி; சுருண்டு விழுந்த திண்டா!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், சையது முஸ்தாக் அலி கோப்பைக்காக பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொண்டு பந்து வீசினார் இந்திய வீரர் அசோக் திண்டா.

பெங்கால் அணியைச் சேர்ந்த விவேக் சிங் பேட்டிங் செய்தபோது, அசோக் திண்டா புல்டாஸ் பால் ஒன்றை வீசினார்.

உடனே மின்னல் வேகத்தில், அந்த பாலை விவேக் ஸ்ட்ரைட் டிரைவில் தூக்கி அடித்தார். எதிர்பாராத விதமாக அந்தப் பந்து திண்டாவின் நெற்றியைப் பதம் பார்த்தது.

பந்து சற்றும் எதிர்பாராமல் வேகமாகத் தாக்கியதில் நிலைகுலைந்து அங்கேயே சுருண்டு விழுந்தார் திண்டா.

உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை. விரைவில் உடல் நலம் பெறுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் திண்டாவை பந்து தாக்கியபோது கனீர் எனக் கேட்கும் சத்தம் நமக்கே ஒரு வித நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here