சர்தார் படேல் மைதானம் டிரம்ப் & மோடி திறந்து வைத்தனர். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் பற்றிய சுவாரசிய தகவல்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் மெல்போர்ன் மைதானம். இதைவிட அகமதாபாத் மோதிராவில் சர்தார் படேல் மைதானம் பெரியதாகக் கட்டப்பட்டுள்ளது.
இது நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
குஜராத் மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராக மோடி இருக்கும் காலத்தில் இருந்தே குஜராத்தில் மிகப்பெரிய மைதானம் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்ததாம்.
அவர் பிரதமர் ஆகிய பிறகு அமித் சா குஜராத் கிரிக்கெட் குழு தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின் இருவரும் கலந்தோசித்து பழுதடைந்த மைதானத்தை சீரமைக்காமல் புதிய மைதானம் கட்ட முடிவு செய்தனர்.
சர்தார் படேல் மைதானம் பற்றிய சுவாரசிய தகவல்கள்
முதலில் பழைய மைதானத்தின் டேட்டா பார்த்து விடுவோம். பழைய மைதானம் 50 ஏக்கர் பரப்பளவு, 1982-2015 வரை இயக்கத்தில் இருந்தது.
மொத்தம் 57000 இருக்கைகள், 37 சர்வதேச போட்டிகள் இதில் 12 டெஸ்ட், 24 ஒரு நாள் மற்றும் ஒரு டி20 போட்டி நடைபெற்றுள்ளது. இது குஜராத்தின் மோதிரா எனும் இடத்தில் இருந்தது.
2016-ஆம் ஆண்டில் அதை முழுவதுமாக இடித்துவிட்டு ரூபாய் 800 கோடி பட்ஜெட்டில் அதே இடத்தில் புதிய மைதானம் கட்ட தொடங்கினர்.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருந்த மெல்போர்ன் 1,00,024 இருக்கைகள் கொண்டுள்ளது. இப்பொழுது மோதிரா மைதானம் 1,10,000 இருக்கைகள் கொண்டு கட்டபட்டுள்ளது.
இதற்கு முன் இந்தியாவின் மிகப்பெரிய மைதானமாக இருந்த ஈடேன் கார்டென் வெறும் 64,000 இருக்கைகள் மட்டுமே கொண்டிருந்தது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை வடிவமைத்த பாப்புளஸ் நிறுவனம்தான் இந்த மைதானத்தையும் வடிவமைத்துள்ளது. லார்சன் மற்றும் டர்போ (L&T) நிறுவனம் இதன் கட்டுமானப் பணியை ஏலம் எடுத்தது.
சர்தார் படேல் மைதானம் சிறப்பு அம்சங்கள்
63 ஏக்கர் பரப்பளவில் 800 கோடி பொருட்செலவில் 110000 இருக்கைகள் கொண்டு பிரம்மாண்டமாக வடிமைக்கப்பட்டுள்ளது. இதில் 10000 பைக் & 3000 கார் பார்க்கிங் வசதியும் உள்ளது.
ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், 76 கார்போர்ட் ஏசி பெட்டிகள் மற்றும் 4 ட்ரெஸ்ஸிங் அறைகள் கொண்ட வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது.
மைதானத்துக்குள் உணவகம், பார்ட்டி ஹால் மற்றும் ரூம் வசதிகள் கொண்ட 55 கிளப் ஹவுஸ்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மழை பெய்து 30 நிமிடத்திற்குள் மைதானத்தில் இருக்கும் அனைத்து தண்ணீரும் உலர்ந்துவிடும் அளவிற்கு மைதான மேற்பரப்பு வடிவைக்க பட்டுள்ளது. இதனால் மழையின் மூலம் போட்டி பாதிக்க வாய்ப்பு குறைவு.
மோதிரா மைதானத்தில் மொத்தம் 11 பிட்ச்கள் உள்ளன. அதில் 3 உள்விளையாட்டு பயிற்சி பிட்ச்களும் 6 வெளி விளையாட்டு பயிற்சி பிட்ச்களும் அடங்கும்.
மைதானத்தின் ஒவ்வொரு ஸ்டாண்டுகளிலும் கழிப்பறை வசதியும் சிற்றுண்டி உணவக வசதியும் செய்யப்பட்டுள்ளது.
புதிய மைதானத்தில் இன்னும் எந்த போட்டியும் நடைபெறவில்லை. இந்த வருட ஐபிஎல் நடக்க வாய்ப்பு குறைவு. முதல் சர்வதேச போட்டி ஐபிஎல் போட்டிக்கு பிறகு நடக்கலாம்.