இந்திய மகளிர் அணி-யைக் கண்டு மிரளும் ஆஸ்திரேலியா. இந்திய வீராங்கனைகள் சிக்சர் மழை பொழிவதைக் கண்டால் சற்று அச்சமாக உள்ளது என ஆஸ்திரேலிய பவுலர் மேகன் ஷட் கூறியுள்ளார்.
அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் vs இங்கிலாந்து மகளிர் அணியினர் மோத தயாராக இருந்தனர். ஆனால் வருண பகவான் இந்திய அணியை போட்டியின்றி தேர்வு செய்ய வைத்தார்.
அதேபோன்று மற்றொரு அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி தென்ஆப்ரிக்கா மகளிர் அணியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
INDW vs AUSW
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் லீக் சுற்றில் ஏற்கனவே மோதிக்கொண்டன. இதில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.
உலகக்கோப்பைக்கு முன்பு நடந்த முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மேகன் ஷட் வீசிய முதல் ஓவரில் முதல் பந்தில் சிக்சர் அடித்தார் மந்தனா.
ஷபாலி தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 16 அடித்தனர். மேகன் ஷட் கேரியரில் முதல் பந்தில் மற்றும் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிக பட்ச ரன்கள்.
இதனால் உலக கோப்பை இறுதிப்போட்டியில் மந்தனா மற்றும் ஷபாலியை கண்டாலே பயமாக உள்ளது. அவர்களுக்கு பந்து வீச நான் விரும்ப வில்லை.
என்னுடைய ஓவரை எளிதாக அடித்து நொறுக்குகின்றனர். எனவே அவர்கள் களத்தில் இருக்கும்போது என்னை ஓவர் போட நிர்பந்திக்க வேண்டாம் என கேப்டனிடம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.