கூகிள் அல்லோ செயலியின் செயல்பாட்டை நிறுத்திய கூகிள்
2016-ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்பட்ட இந்த செயலி வாட்ஸ்ஆஃப், டெலிகிராம் போன்ற உடனடித் தகவல் அனுப்பும் ஒரு மெசேஜ்ஜிங் ஆஃப் ஆகும்.
கூகிள்அல்லோ, கூகிள்டுயோ ஆகிய இரண்டு செயலிகள் ஒரே நாளில் வெளியிடப்பட்டது. கூகிள் டுயோ ஒரு வீடியோ காலிங் ஆஃப் ஆகும்.
போதிய அளவு பயனாளர்கள் இல்லாத காரணத்தால் கடந்த டிசம்பர் மாதம் கூகிள் அல்லோ (Google Allow) செயலியின் செயல்பாட்டை முழுமையாக நிறுத்தப்போவதாக கூகிள் நிறுவனம் தெரிவித்தது.
இறுதியில் கூகிள் இன்றைக்குத் தான் இந்த செயலியின் செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் இதன் பயனாளர்கள் அனைவரின் தகவல்களும் முழுமையாக அழிக்கப்பட்டு விடும்.
ஏற்கனவே சேமிக்கப்பட்டிருந்த பேக் அப்களும் முழுமையாக அழிந்து விடும் என கூகிள் தெரிவித்துள்ளது.
மார்ச் 12-ஆம் தேதிக்குப் பிறகு முழுமையாக அனைத்தும் அழிந்து விடும் அதற்கு முன் வேண்டுமென்றால் நீங்கள் உங்களுடைய மெனுவில் சென்று உங்களுடைய மெசேஜ்-யை மட்டும் பேக் அப் செய்துகொள்ளலாம்.
மேலும் கூகிள் மெசேஜ்ஜிங் ஆஃப் ஹேங்க் அவுட்ஸ் (Hangouts) மீது மட்டுமே முழுக் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் கூகிள் பிளஸ் செயலியின் செயல்பாடும் முழுமையாக நிறுத்தப்படும் என்று ஏற்கனவே கூகிள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.