Home Latest News Tamil ஹவாய் நிறுவன சி‌இ‌ஒ ‘மேங் வான்ஸோ’ பெயிலில் வெளியே வந்தார்

ஹவாய் நிறுவன சி‌இ‌ஒ ‘மேங் வான்ஸோ’ பெயிலில் வெளியே வந்தார்

370
0
ஹவாய்

ஹவாய் நிறுவன சி‌இ‌ஒ ‘மேங் வான்ஸோ’ பெயிலில் வெளியே வந்தார்.

கனடா ஜெயிலில் இருந்த சீனாவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் சி‌இ‌ஓ மேங் வான்ஸோ பெயிலில் வெளியே வந்தாலும் அவரால் சொந்த நாடு திரும்ப இயலாது.

இறுதிக் கட்ட வழக்குகள் அவருக்கு இன்னும் இருப்பதால் தற்போது கனடாவில் வேன்கூவர் நகரத்தில் மேங் வான்ஸோ தங்கி இருக்கிறார்.

ஹவாய் நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட வழக்குகளை அமெரிக்க நாடு தொடுத்துள்ளது.அவை பின்வருமாறு வங்கி ஊழல், சட்டம் ஒழுங்கு மீறல் (obstruction of justice) மற்றும் தொழில்நுட்பம் திருடுதல் போன்ற பல்வேறு குற்றங்களை முன் வைத்துள்ளது.

அமெரிக்காவின் ஒப்பந்தத்தை மீறி, ஈரான் நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஹவாய் செய்துவிட்டதாக, மேங் வான்சோவை கைது செய்ததாக அமெரிக்கா கூறியது.

சென்ற வருடம் டிசம்பர் மாதம் மேங் வான்ஷோ அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க சீன வர்த்தகப்போர்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கடுமையான வர்த்தகப்போர் நடைபெற்று வருகின்றது. சீன நிறுவனங்களின் வளர்ச்சி, அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை.

எனவே சீனத் தயாரிப்புகளை, அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற மேலை நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்குட்பட்டே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஹவாய்யின் பங்குகளை அமெரிக்காவில் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இதை காரணமாக வைத்தே அமெரிக்கா இந்த வழக்கை இழுத்தடிக்கிறது.

Previous articleமுதல் ஒரு நாள் போட்டியில் தோனி பங்கேற்பது சந்தேகம்
Next articleஉண்மையான அபினந்தன் மனைவி, மகன் இவர்களில் யார்?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here