Home நிகழ்வுகள் தமிழகம் உண்மையான அபினந்தன் மனைவி, மகன் இவர்களில் யார்?

உண்மையான அபினந்தன் மனைவி, மகன் இவர்களில் யார்?

769
0
உண்மையான அபினந்தன் மனைவி

உண்மையான அபினந்தன் மனைவி, மகன் இவர்களில் யார்?

ஒரு செய்தி அதிகம் பேசப்படும்போது அந்த செய்தியைப் பற்றிய அதிக போலிச் செய்திகளும் சமூகவலைதளங்களில் பரப்படும்.

சமீபத்தில் பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்த இந்திய விமானி அபினந்தன் வர்த்தமன் மனைவி என்று வேறு நபர்களின் புகைப்படங்கள் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றது.

மேலே உள்ள மூன்று புகைப்படங்களும் கடந்த சில தினங்களாக அபினந்தன் மனைவி என பகிரப்பட்டு வருகின்றது.

முதல் படம்

முதல் படத்தில் இருப்பவர் ஒரு ராணுவ வீரரின் மனைவி. அவர் அபினந்தனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அவரது குடும்ப உறுப்பினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இரண்டாவது படம்

இரண்டாவதாக இருப்பவர் டாக்டர் ஃபரிஹா புக்தி. இவர் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் வேலை செய்பவர்.

இவர் தான் அபினந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்தார். இந்த இருவரின் புகைப்படங்களும் அபினந்தனின் மனைவி என சமூக வலைதளங்களில் தவறாகப் பகிரப்பட்டு வருகின்றன.

மூன்றாவது படம்

கடைசியாக உள்ள புகைப்படம் அபினந்தன் மனைவி மகன்கள் என பகிரப்பட்டு உள்ளது. சில மீடியாக்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.

உண்மையான அபினந்தன் மனைவி இவரா? இந்தப் புகைப்படமும் சந்தேகத்தை எழுப்பும் விதமாகவே உள்ளது.

அபினந்தன் இப்போது உள்ள அதே தோற்றத்தில் புகைப்படத்தில் உள்ளார். மேலும் இந்த புகைப்படம் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தி எடுக்கப்பட்டது போன்றும் இல்லை.

மிகவும் பழைய புகைப்படத்தில் அபினந்தன் அதே தோற்றத்துடன் இருப்பது சாத்தியமில்லை.

மேலும் அவரது மனைவி தமிழகத்தைச் சேர்ந்தவர் போன்றே இல்லை. அபினந்தனைவிட வயதில் மூத்தவர் போன்றும் காட்சியளிக்கிறார்.

அபினந்தனுக்கு இரு குழந்தைகள் உள்ளது. ஆனால் புகைப்படத்தில் ஒரு குழந்தையே உள்ளது. எனவே இது போட்டோஷாப் செய்த புகைப்படம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அபினந்தன் சொந்த ஊர் திருவண்ணாமலை அருகில் உள்ளது. அவருக்கு இரு குழந்தைகள். மனைவி குழந்தைகளுடன் டெல்லியில் வசித்து வருகிறார்.

அவருடைய பெற்றோர் சென்னை மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர் என்பது மட்டுமே வெளியுலக்கு தெரிந்த செய்தி.

Previous articleஹவாய் நிறுவன சி‌இ‌ஒ ‘மேங் வான்ஸோ’ பெயிலில் வெளியே வந்தார்
Next articleபுல்வாமா பதிலடி தாக்குதல் உண்மையா? மௌனம் கலைத்தார் மம்தா
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here