புல்வாமா பதிலடி தாக்குதல் உண்மை? மௌனம் கலைத்தார் மம்தா
ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14 சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்குள் சென்று தீவிரவாதிகள் முகாம்களைத் தாக்கி அழித்ததாக இந்திய ராணுவம் கூறியது.
இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி சந்தேகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பயங்கரவாதிகள் 300 பேர் கொல்லப்பட்டனர் என இந்திய ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையா? பொய்யா?
சர்வதேச ஊடகங்கள் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறியுள்ளது. ஆனால் இந்திய ஊடங்கள் 300 பேர் இறந்ததாகக் தெரிவித்துள்ளது.
இதில் எது உண்மை? என மத்திய அரசு தெளிவு படுத்தவேண்டும். புல்வாமா தாக்குதல் நடந்தவுடனும் சரி, அதற்கு இந்தியா பதிலடி தந்தவுடனும் சரி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் ஏன் கூட்டவே இல்லை?
உரி, பதான்கோட்டில் தீவிரவாதத் தாக்குதல் நிகழ்ந்தபோது ஏன் பதில் தாக்குதல் நடத்தப்படவில்லை?
அப்படியாயின் இது அரசியலுக்காக நடந்தப்பட்ட பதில் தாக்குதலா? என பல சந்தேகக் கேள்விகளை எழுப்பி மம்தா பேசினார்.