Home Blog Page 119

சிம்ரனுக்கு முத்தம் கொடுப்பது யார்? வைரலாகும் வீடியோ

0
simran kiss video

சிம்ரனுக்கு முத்தம் கொடுப்பது யார்?: வைரலாகும் வீடியோ! simran kiss video நடிகை சிம்ரனுக்கு சிறுவன் ஒருவன் முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

simran kiss video: அந்த சிறுவன் சிம்ரனின் மகன். தனது அம்மாவிற்கு முத்தம் கொடுத்த சிம்ரனின் மகன் டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். 1990 ஆம் ஆண்டு பிற்பகுதிகளில் நடிக்க ஆரம்பித்தவர்.

அஜித், விஜய், பிரசாந்த், சரத்குமார் என்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். எல்லா நடிகைகளைப் போன்று திருமணத்திற்கு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த சீமராஜா படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அப்புறம் என்ன, ரஜினியின் பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அண்மையில், நடந்து முடிந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு காலத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை, தற்போது சினிமா வாய்ப்பில்லாமல், மேடைகளில் நடனம் ஆடும் நிலை ஏற்பட்டது என்று பலரும் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை வந்துவிட்டது.

அந்த வகையில், வீட்டில் இருக்கும் நடிகை சிம்ரன், தனது மகனுடன் இணைந்து டிக் டாக் வீடியோவில் நடித்துள்ளார்.

அதில், இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொள்ளும் வீடியோ இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக நடிகை த்ரிஷா, தனது த்ரிஷா கிருஷ்ணன் என்ற டிக் டாக் அக்கவுண்டிலிருந்து வீடியோ வெளியிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு டான்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தார்.

3

விஜய் சேதுபதியின் டுவிட்டரில் போலி பதிவு: வைரலாகும் டுவீட்!

0
Vijay Sethupathi

Vijay Sethupathi; விஜய் சேதுபதியின் டுவிட்டரில் போலி பதிவு: வைரலாகும் டுவீட்! நடிகை ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி பேசியதாக போலியான டுவிட் ஒன்று விஜய் சேதுபதியின் டுவிட்டர் அக்கவுண்டில் பதிவிடப்பட்டுள்ளது.

ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளதாக டுவிட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் நடிகர் விஜய் சேதுபதி. வருடத்திற்கு ஏராளமான படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார்.

அதனால் என்னவோ, இவரைப் பற்றிய வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆம், சமீபத்தில் விஜய் சேதுபதி மதம் மாறிவிட்டார் என்று செய்திகள் பரவியது.

இதற்கு ஏற்பவே, மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், மனிதனை மனிதன் தான் காப்பாற்ற முடியும். இது மனிதன் வாழ்வதற்கான இடம்.

மனிதன் சகோதரத்துடன் அன்பை பரிமாறிக் கொண்டு வாழ வேண்டும். மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையில் மதம் அவசியமில்லை. சாமி பல கோடி வருடங்களாக இங்கு இருக்கிறது.

ஆனால், சாமி இன்னும் சாமியை காப்பாற்றும் மகாமனிதனை இன்னும் படைக்கப்படவில்லை. சாமி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் என்று குறிப்பிட்டு பேசினார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஜோதிகா விருது விழாவில் கோவில்கள் பற்றி பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மிகவும் அழகானது. உதய்பூர் அரண்மனை போல் அழகாக இருக்கும். இதற்கு முன் நான் பார்த்துள்ளேன்.

அங்கு போகாமல் இருக்காதீர்கள் என சிலர் கூறினர். ஆனால், கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை.

இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள்.

அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்று பேசியிருந்தார்.

இதற்கு அப்போது சர்ச்சை எழுந்தது. மேலும், பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த இந்லையில், ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாக ஒரு போலியான டுவிட் உலா வருகிறது.

அதில், ஜோதிகா அவர்களின் துனிவான பேச்சுக்கு பாராட்டுக்கள். அவர்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் சக நடிகனாக முதல் ஆளாக இருப்பேன். மனிதனை மனிதன் தான் காப்பாற்ற முடியும். கடவுளால் வேடிக்கை பார்க்க தான் முடியும். கோவில்கள் மருத்துவமனையாக மாறும் காலம் நெருங்கிவிட்டது” என அதில் விஜய் சேதுபதி கூறியது போல குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அது Fake என விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

3

BetheREALMAN சவாலை கண்டுகொள்ளாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

0
Rajinikanth

BetheREALMAN சவாலை கண்டுகொள்ளாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! சிரஞ்சிவி கொடுத்த சவாலை ரஜினிகாந்த் இதுவரை கண்டுகொள்ளவும் இல்லை, செய்து முடிக்கவும் இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.

BetheREALMAN சவாலை ரஜினிகாந்த் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா லாக்டவுனில் பிஸியாக இருக்கும் பிரபலங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க்கை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், அர்ஜூன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் வங்கா ரெட்டி #BetheREALMAN என்ற ஹேஷ்டேக்கில் புது டுவிட்டர் சவாலை அறிமுகம் செய்துள்ளார்.

அதில், ஒரு ஆணால், தனது மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகளை சிறப்பாக செய்து காட்ட முடியும். இது போன்ற தருணங்களில் தன்னுடைய மனைவியை தனியாக வேலை செய்ய விடமாட்டார்.

தயவு செய்து வீட்டு வேலைகளுக்கு உதவுங்கள் #BetheREALMAN . இதை ஊக்கப்படுத்தி இயக்குநர் ராஜமௌலியை ஒரு வீடியோ வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்ட ராஜமௌலி, வீட்டை சுத்தம் செய்து, ஜன்னல், கதவு ஆகியவற்றை துடைத்து எடுக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அவர் இந்த சவாலை வெற்றிகரமாக செய்து முடித்ததுடன் ஆர்ஆர்ஆர் RRR படத்தில் நடிக்கும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணுக்கு இந்த சவாலை கொடுத்துள்ளார்.

ஜூன் என்.டிஆர் இந்த சவாலை முடித்து சிரஞ்சீவிக்கு சவால் கொடுத்துள்ளார். சிரஞ்சிவீயும் இந்த சவாலை வெற்றிகரமாக செய்து முடித்து ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் ஆகியோருக்கு கொடுத்துள்ளார்.

ஆனால், இதுவரை ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் இருவருமே அந்த சவாலை செய்யவில்லை.

மணிரத்னத்திற்கு தனியாக டுவிட்டர் அக்கவுண்ட் இல்லை. ஆனால், ரஜினிக்கு இருக்கிறது. அவர் அடிக்கடி டுவிட்டர் பயன்படுத்துவது கிடையாது. ஆதலால் இதுவரை #BetheREALMAN சேலஞ்சை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3

இந்தியாவில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டோர் மட்டும் 10 லட்சம் பேர் வெளியான புள்ளி விவரம்

0
இந்தியாவில் கொரோனாவால்

இந்தியாவில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டோர் மட்டும் 10 லட்சம் பேர் வெளியான புள்ளி விவரம், கொரோனோ அறிகுறியுள்ள 9.45 பேர் இது வரை தனிமையில் உள்ளனர்.

நேற்று அரசாங்கம் வெளியிட்ட ரிபோர்ட்டில் ஐ‌டி‌எஸ்‌பி என்னும் கண்காணிப்போர் பிரிவின் கீழ் இதுவரை இந்தியாவில் 9.45 பேர் தனிமையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி 23ஆம் தேதி வெறும் 13பேர் தனிமையில் வைக்கப்பட்டு இருந்தனர். மார்ச் 19ஆம் தேதி தனிமையில் இருந்தோர் 90459 ஆக அதிகரித்தது.

தற்போது நிலவரப்படி தனிமையில் இருப்போர் 10 லட்சத்தை நெருங்கியது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23400ஐ தாண்டியது.

3

ரசிகர்களுக்கு உதவி செய்த விஜய்: பாராட்டு தெரிவித்த சச்சின் இயக்குநர் ஜான் மகேந்திரன்!

0
Master Vijay

ரசிகர்களுக்கு உதவி செய்த விஜய்: வள்ளல் தளபதி விஜய்! தனது ரசிகர்களுக்கு 5000 ரூபாய் அனுப்பி உதவி செய்திருப்பதற்கு சச்சின் பட இயக்குநர் ஜான் மகேந்திரன், தளபதி விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு உதவி செய்த, விஜய்க்கு இயக்குநர் ஜான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், தளபதி விஜய் ரூ.1.3 கோடி வரையில் நிதியுதவி கொடுத்துள்ளார்.

மேலும், ரசிகர்களுக்கு என்று ரூ.50 லட்சம் வரையில் நிதியுதவி அளித்துள்ளார் என்றும் கூறப்பட்டது. மொத்தமாக ரூ.1.8 கோடி வரையில் விஜய் நிதியுதவி அளித்து உதவி செய்துள்ளார்.

இந்த நிலையில், தான் செய்யும் உதவி தனது ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக ரசிகர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.5000 வீதம் நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக வறுமையில் கஷ்டப்படும் ரசிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா ரூ.5000 அனுப்பி வைத்துள்ளார். Vijay Charitable Trust மூலமாக இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, விஜய் ரசிகர்கள் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை, 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களுக்கு விஜய் பணம் அனுப்பி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டதோடு, வள்ளல் தளபதி விஜய் என்று டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த நிலையில், விஜய்யின் சச்சின் படத்தை இயக்கிய் ஜான் மகேந்திரன் விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தெறி படத்தில் வில்லனாக நடித்த இயக்குனர் மகேந்திரனின் மகன் தான் ஜான் என்பது குறிப்பிடத்தக்கது.

சபாஷ் விஜய்…உயிர் போயி கொண்டிருக்கும் நேரத்திலும் மத, ஜாதி , வடக்கன், தெர்க்கன் என்று வீண் துவேஷங்கள் பலர் செய்து கொண்டிருக்கும் பொழுது, அமைதியாக, உங்களை நேசிப்பவர்களுக்கு நீங்கள் நேசக்கரம் நீட்டுவதை பார்க்கும் பொழுது…மனதார இறுக அணைத்து வாழ்த்துகள் விஜய் என்று பதிவிட்டுள்ளார்.

3

ஆவின் பால் & பால் பொருட்களை டோர் டெலிவெரி செய்ய தமிழக அரசு முடிவு

0
ஆவின் பால் & பால் பொருட்களை

ஆவின் பால் & பால் பொருட்களை டோர் டெலிவெரி செய்ய தமிழக அரசு முடிவு, ஜோமாட்டோ மற்றும் டன்சன் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் அதிக சிரமப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் பிற பால் சார்ந்த பொருட்கள் டோர் டெலிவெரி செய்ய தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் முழு நேர ஊரடங்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படவுள்ளதால் அனைத்து பொருட்களுமே டோர் டெலிவெரி செய்யும் நிலை வந்திருக்கிறது.

இதனிடையே சோமாட்டோ மற்றும் டன்சன் ஆகிய நிறுவனங்களிடம் முதல்வர் பேசி வருவதாக அவர் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

3

கேரட் பீர் தயாரிப்பு செய்து விற்ற சென்னை இளைஞர் கைது

0

கேரட் பீர் தயாரிப்பு செய்து விற்ற சென்னை இளைஞர் கைது, யுட்யூப் பார்த்து கேரட் பீர் தயாரித்து விற்பனை செய்த திருவொற்றியூர் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 3ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு இருக்கும் நிலையில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் குடிமகங்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் வீடியோ பார்த்து மது தயாரித்து அதிக பேர் போலீசில் சிக்கி வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் ஒருவர் சிக்கிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் சிக்கியுள்ளார்.

இந்நிலையில், திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபானம் தயாரிப்பது போன்ற வாசனை வருவதாக அக்கம் பக்கத்தினர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் கேரட் மூலம் பீர் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, சுகுமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 2 லிட்டர் கேரட் பீரை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், யு டியூப் வீடியோ பார்த்து கேரட் பீர் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

3

காதல் ஜோடிக்கு கொரோனா; மூன்று கள்ளக்காதலர்கள், இரண்டு கள்ளக்காதலிகள் என தொடரும் சங்கிலி சிபிசி‌ஐ‌டி விசாரணை

0
காதல் ஜோடிக்கு கொரோனா

காதல் ஜோடிக்கு கொரோனா; மூன்று கள்ளக்காதலர்கள், இரண்டு கள்ளக்காதலிகள் என தொடரும் சங்கிலி சிபிசி‌ஐ‌டி விசாரணை, டெல்லியில் கொரோனா பரவல்.

இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறையவில்லை. சமூக பரவல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இது வரை 24000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா வைரஸால் 723பேர் உயிரிழந்த நிலையில் 4,184 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் இருக்கும் ஒரு காதல் ஜோடிக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களின் பயணம் மற்றும் பிற சந்திப்பு விவரங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் தொடர்ச்சியில் இதில் அந்த காதலிக்கு மேலும் மூன்று கள்ளக்காதலர்கள் இருப்பது தெரிவந்துள்ளது.

அந்த காதலன்களில் ஒருவருக்கு மேலும் இரண்டு காதலிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் ஒரு பெண்ணின் மொபைல் ஃபோனை பரிசோதித்ததில் அவருக்கு அதிகமான ஆண்களுடன் பழக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது.

இவ்வளவு குழப்பம் நிறைந்த இந்த சங்கிலி தொடரில் குழம்பிய நிபுணர்கள் பிரச்சனையை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விட்டது.

3

சாதனை படைத்த மாஸ்டர்: டிக் டாக்கில் 1500 மில்லியன் வியூஸ்!

1
Master Album

சாதனை படைத்த மாஸ்டர்: டிக் டாக்கில் 1500 மில்லியன் வியூஸ்! விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், மாஸ்டர் ஆல்பம் டிக் டாக்கில் 1500 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஆல்பம் டிக் டாக்கில் 1500 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கடந்த 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக வெளியாகவில்லை.

ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என்று செய்தி வெளியானது.

அதோடு, மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், மாஸ்டர் பட ஆல்பம் டிக் டாக்கில் சாதனை படைத்துள்ளது. கடந்த மார்ச் 15 ஆம் தேதி மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடந்து பாடல்கள் வெளியிடப்பட்டது. இதையடுத்து, படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் ஆல்பம் டிக் டாக்கில் 1500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக, MasterAlbum1500M என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆன்லைன் பயிற்சியில் அந்த மாதிரி படங்கள் ! அதிருப்தி அடைந்த கோபிசந்த்.

0

 

கொரோனா பாதிப்பு காரணமாக உலகமே அடைபட்டு உள்ளது.நிறுவனங்கள், வகுப்புகள் எல்லாம் ஆன்லைனை மட்டுமே நம்பியுள்ளது. வகுப்புகள், வியாபாரம் எல்லாமே முடங்கி விட்டது இருந்தாலும் ஆன்லைன் பயிற்சிகள் சற்று கை கொடுக்கிறது.இந்நிலையில் அணைத்து வகை விளையாட்டுப் போட்டிகளும் நிறுத்திவைக்கப் பட்டுள்ள நிலையில், பல நிறுவனங்கள் ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பும், இந்திய விளையாட்டு கூட்டமைப்பும் இணைந்து பயிற்ச்சி வகுப்பு நடத்தியது.

சுமார் 700 உள்நாடு மற்றும் சர்வதேச வீரர்கள் வீடியோ காண்பிரண்ஸ்  மூலம் பங்குபெற்றனர். அப்போது  பயிற்சிக்கு இடைஇடையே ஆபாச மற்றும் நிர்வாண படங்கள் தோன்றியதால் பலர் அதிருப்தி அடைந்தனர். 

இந்திய நட்சத்திர பயிற்சியாளர் கோபிசந்த் இதனால் அதிருப்தியுடன்  வெளியேறினார். அவர் முன்னாள் இந்திய வீரர், கோபிசந்த் பயிற்சி அகாடமி நடத்தி வருகிறார். அதில் இந்திய வீராங்கனை, ஒலிம்பிக் புகழ் பி.வி.சிந்துவும் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிட தக்கது.

பலர்  குழந்தைகளுடனும், குடும்பத்தாருடனும் இப்பயிற்சியில் பங்கேற்றதால் சர்ச்சையும், சலசலப்பும் ஏற்பட்டது.

இது தொழில் நுட்ப கோளாறால் ஏற்பட்ட நிகழ்வு என இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பும், இந்திய விளையாட்டு கூட்டமைப்பும்விளக்கம் அளித்துள்ளது.

சா.ரா .

3