Ponmagal Vandhal Digital Release ; திரைக்கு வராமல் டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியாகும் சூர்யா படம்? சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் (Ponmagal Vandhal Digital Release) வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குநர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில், சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள். இப்படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பாண்டிரயராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், கொரோனா ஊரடங்கால், திரையரங்குகள் மூடப்பட்டு, படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.
இந்தப் படம் மட்டுமல்ல, விஜய்யின் மாஸ்டர் படம் உள்பட நிறைய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. மேலும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது.
இதன் காரணமாக, திரையில் வெளியிடாமல், சிறிய பட்ஜெட் படங்களை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அந்த வரிசையில், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் படத்தின் வசூல் பட்ஜெட்டை விட இருமடங்கு லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
ஊரடங்கு அமலில் உள்ளதால் அதை சாமாளிக்கும் விதமாக ஜோதிகாவின் படம் டிஜிட்டலில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனினும், இது குறித்து தயாரிப்பு தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
Akshaya Tritiya: அட்சய திருதியை ஏன் கொண்டாடப்படுகிறது? அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகுமா? அட்சய திருதியையில் உப்பு ஏன் வாங்க வேண்டும்?
அட்சய திருதியை அன்று என்ன காரியங்கள் செய்யலாம் & செய்யக்கூடாது?
இந்தியாவில் சில திதிகளுக்கென்று முக்கியத்துவம் தரப்படுகிறது அப்படிப்பட்ட திதிகளில் தான் நற்காரியங்கள் செய்யப்படும். மேன்மையை தரும் தினங்களாக அத்தகைய நாட்களை சிறப்பு மிகுந்ததாக கருதுகின்றனர்.
இந்த வரிசையில் இந்து மற்றும் சமணர்களின் முக்கிய தினமாக கொண்டாடப்படுகிறது. அமாவாசை முடிந்து மூன்றாவது திதி திருதியை ஆகும். சித்திரை மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும்.
அட்சயம் என்றால் சமஸ்கிருதத்தில் குறையாதது என்று பொருள். இந்த தினத்தில் எதை செய்தாலும் அது குறையாமல் ஆண்டு முழுதும் நிறைந்திருக்கும் என்று நம்புகின்றனர்.
அட்சய திருதியை சிறப்புகள்
அட்சய திருதியை (Akshaya Tritiya) திருமாலின் அவதாரமான பரசுராமரின் பிறந்த தினமாக கருதப்படுகிறது. பிரம்மன் திரேதா யுகத்தை உருவாக்கியதும் அந்த நாளில் தான் எனப்படுகிறது.
பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டு வந்ததும் இந்த சிறப்பு மிக்க நாளில் தான். காசியில் அன்னபூரணி சிவபெருமானிற்கு அன்னம் அளித்த நன்னாள் இதுவே ஆகும்.
சமணர்களின் தீர்த்தங்கரர்களில் ஒருவரான ரிஷப தேவரின் நினைவாக கூறப்படுகிறது.
மேலும் ஜோதிடரீதியாக சூரியன் மேஷ ராசியில் உள்ள மாதம் சித்திரை ஆகும். சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் பூர்ணத்துவம் அடைய வளர்பிறையையாக வளரத் துவங்கும் மூன்றாம் நாள் இந்த திருதியை ஆகும்.
அட்சய திருதியையில் என்ன காரியங்கள் செய்யலாம்?
கங்கை, யமுனை, காவேரி போன்ற புண்ணிய நதிகளில் புனித நீராட புண்ணியங்களை தரும்.
அட்சய திருதியை அன்று உண்ணா விரதமிருந்து திருமால் மற்றும் மகாலட்சுமியை பூஜிக்க உகந்த நாளாகும்.
பரசுராமர் ஜெயந்தி என்பதால் பரசுராமரை பூஜிக்க வேண்டும். லட்சுமி குபேர பூஜை செய்ய நன்மைகள் பெருகும்.
இந்நாளில் ஞானத்தை பெற தானங்கள் செய்ய ஏற்ற நாளாகும். குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய உகந்த நாளாகும்.
ஏழை எளியவர்களுக்கு இந்நாளில் தானியங்களை, உடைகளை தானமாக அளிப்பது பாவங்களைப் போக்கும்.
யாகங்கள், வேத பாராயணங்கள் செய்யலாம் புதிய காரியங்களை துவக்கலாம். பரிசில்களை வழங்கலாம்.
புதிய தானியங்களை வாங்குவதால் தானிய பஞ்சங்கள் தீரும். தானியங்களை வைத்து பூஜைகள் செய்ய உகந்த நாளாகும். தயிர் சாதத்தை ஏழைகளுக்கு அன்னதானமாக வழங்க முன் ஜென்ம பாவங்கள் தீரும்.
அட்சய திருதியையில் ஏன் உப்பு வாங்க வேண்டும்?
“உப்பில்லா பண்டம் குப்பைக்கே” என்பது பழமொழியாகும். அந்த அளவிற்கு உப்பு என்பது நமது அத்யாவசிய தேவையாகும்.
உப்பு கடலில் இருந்து கிடைக்கிறது. மகாலட்சுமியும் கடலில் இருந்து தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
மகாலட்சுமியுடன் தோன்றியதால் உப்பு மகாலட்சுமியின் அம்சமாக கூறப்படுகிறது. எனவே தான் எந்த சுபகாரியம் ஆனாலும் உப்பை நம் முன்னோர்கள் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்த அட்சய திருதியை தினத்தில் உப்பு வாங்குவதால் மங்களம் பெருகும் மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.
நாம் அனைவரும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதை விட தானங்கள் செய்வதும், நம்மால் வாங்க இயன்ற உப்பை வாங்கி மங்களம் பெறலாம்.
அட்சய திருதியையில் செய்யக் கூடாதவை
எந்த திதியாக இருந்தாலும் அன்றைய தினத்தின் கிரக நிலை நேர காலங்களை பொருத்தே நற்காரியங்கள் செய்ய வேண்டும்.
பஞ்சாங்க அடிப்படையில் தான் செயலாற்ற வேண்டும். குருட்டுத்தனமாக நகை வியாபாரிகளின் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.
மேலும் கடன்களை பெற்று தங்கநகை வாங்கி கடனாளி ஆக வேண்டாம். மடமையாலும், மூடநம்பிக்கைகளாலும் இருப்பது தவறு. நமக்கு தேவையான ஒன்று உணவு பஞ்சம் இல்லாமல் இருப்பதே ஆகும்.
அட்சயதிருதியை ஆனாலும் கிரக நிலையை கணக்கிட்டு விலை உயர்ந்த பொருட்களை வாங்கவும். அப்பொழுது தான் நன்மை கிடைக்கும்.
2020-இல் அட்சய திருதியை
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி ஞாயிற்று கிழமை வருகின்றது. சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாளில் வருவதால் கோதுமை தானியம் வாங்கவும், தானமாக வழங்கவும் கூடுதல் நன்மை கிடைக்கும்.
அனைவரும் மகாலட்சுமியின் அருள் பெற்று சகல சௌபாக்கியம் பெற்று வாழ பிராத்தனை செய்வோம்.
உலகம் முழுவதும் கொரோனா நோய் அதி வேகமாக பரவி வருவதால், பல வகையான விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
ஒலிம்பிக் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் , சர்வதேச டென்னிஸ் போட்டிகள் ஒத்தி போட பட்டுள்ளது. கிரிக்கெட் ஐபில் கூட நடக்க வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது , சர்வதேச டுவெண்ட்டி டுவெண்ட்டி கிரிக்கெட் போட்டிகள் கூட திட்டமிட்டபடி இந்த ஆண்டு நடக்க வாய்ப்பு குறைவு.
இந்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் 29 தேதி முதல் ஜூலை 12 தேதி வரை இங்கிலாந்து நாட்டில் நடைபெற இருந்த புகழ் பெற்ற கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான “ விம்பிள்டன்” (Wimbledon) போட்டிகளை ரத்து செய்வதாக ஏஇஎல்டிசி ( AELTC –The All England Lawn Tennis and Croquet Club ) அறிவித்து உள்ளது!
இந்த அறிவிப்பு டென்னிஸ் ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளது. இதுவரை விம்பில்டன் போட்டிகள் முதல் உலகப்போர் ( 1915-1918 ) , மற்றும் இரண்டாம் உலகப் போர் ( 1942-1945 ) ஆகிய தவிர்க்க முடியாத சூழ் நிலைகளில் மட்டுமே தள்ளிபோட பட்டுள்ளது.
விரைவில் கொரோனா தோற்று விலகி மீண்டும் விம்பில்டன் போட்டிகள் நடைபெற வேண்டும் என்பதே அணைத்து டென்னிஸ் ரசிகர்கள் விருப்பம்.
ரமலான் நோன்பு 2020: உலகம் முழுவதும் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் ஊரடங்கில் உள்ள நிலையில் இந்தியாவில் இன்று முதல் ரமலான் தொடங்குகிறது.
ரமலான் என்றால் என்ன?
இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதம் ரமலான். மக்காவிலுள்ள ஹிரா குகையில் கி.பி. 610 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் தான் முஹம்மது நபி அவர்களுக்கு திருக்குர்ஆனின் முதல் இறை வசனம் இறக்கியருளப்பட்டது.
ரமலான் மாதத்தில் ஏன் முஸ்லிம்கள் நோன்பு இருக்கிறார்கள்?
“ரமலான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேரான வழியை தெளிவாக்க கூடியதுமாகவும் உள்ள திருகுர்ஆன் அருளப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்”
-அல்குர்ஆன் 2:185
இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்று நோன்பாகும். இறைவனால் விலக்கப்பட்ட தீமைகளை விட்டு விலகி அவனுடைய கட்டளைக்கு அடிபணிந்து இஸ்லாமிய நெறியின் படி தனது வாழ்வை அமைத்துக் கொள்ள இம்மாதம் ஒரு பயிற்சியை போன்றதாகும்.
12 வருடங்களாக குறைஷிகளின் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான முஸ்லிம்கள் கி.பி. 622 ஆம் ஆண்டு மக்காவில் இருந்து இடம்பெயர்ந்து மதீனாவிற்கு குடியேறினர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு நோன்பு குறித்த திருக்குர்ஆன் வசனம் இறக்கியருளப்பட்டது.
உடல் எடையை குறைப்பதற்கான மாதமல்ல ரமலான்! கண்ணியமிக்க இம்மாதத்தில் உணவை குறைப்பதோடு நிறுத்திவிடாமல் பாவங்களை குறைத்து நன்னடத்தை பேணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.
“நோன்பின்போது யார் பொய் பேசுவதையும் தீய செயல்களையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணாமலும் பருகாமலும் இருப்பது அல்லாஹ்விற்கு தேவை இல்லை” என்பது நபிமொழி.
ஒவ்வொரு இஸ்லாமியரும் நோன்பு காலத்தில் காலை முதல் மாலை வரை உணவு, நீர், புகைப்பிடித்தல், பழரசம் அருந்துதல் என அனைத்தும் தவிர்க்க வேண்டும்.
நோன்பு துவங்கும் முன் உண்ணும் உணவு “ஸஹர்” எனப்படுகிறது. நோன்பு முடிந்த பின் உண்ணும் உணவு “இப்தார்” எனப்படுகிறது.
நோன்பு இருப்பதால் ஏற்படும் நற்பண்புகள்
நோன்பு காலத்திற்கு பின் தன்னடக்கம், நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலம், பகிர்ந்து உண்ணுதல், உணவு தானம் போன்ற நற்பண்புகள் மனதில் தோன்றும்.
ரமலான் நோன்பின் பலன்கள் குறித்து திருக்குர்ஆன் இரண்டாம் அத்தியாயம் 183 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
“இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்”
2020-இல் ரமலான் நோன்பு
இந்த ஆண்டு ரமலான் நோன்பு இன்று ஏப்ரல் மாதம் 25-ஆம் நாள் சனிக்கிழமை துவங்குகிறது. நோன்பு நோற்பவர்கள் அனைவரும் முறையாக நோன்பிருப்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் தலையாய கடமையாகும்.
அல்லாவின் கருணையினால் உலகில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கி உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ தவறாமல் தொழுகை செய்வோம்.
இன்று பணியாளர்களிடம் சந்தோஷமாக நாளை கழிப்பீர்கள். துணையிடம் நட்பான அணுகுமுறை தேவையாகும். பணப்புழக்கம் குறைவாகவே இருக்கும். மற்றபடி சிறந்த நாளாகவே இருக்கும்.
இன்று காரியங்களை கவனமாக கையாள வேண்டிய நாளாகும். துணையிடம் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். வேலை பழு அதிகமாக இருக்கும். உடல்நிலை நலமுடன் இருக்கும்.
நீங்கள் நல்ல உயர்வான நிலையை அடைய ஏதுவான நாள் ஆகும். தொட்ட காரியங்கள் அனைத்தும் ஜெயமாக முடியும் நாளாகும். பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் குறையேதும் இருக்காது
இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாளாகும். விட்டு கொடுக்கும் மனப்பான்மை அவசியம் இன்று வேண்டும். பணியில் சற்று கவனம் செலுத்தாமல் இருப்பீர்கள். அதனால் சில பிரச்சனைகள் வரும். வீட்டில் அமைதியின்மை நிலவும்.
இன்று பயத்தால் குழம்பிய நிலையில் இருப்பீர்கள். மன உறுதி அவசியம் தேவையான நாளாகும். நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். பணியிடத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் பூசல்கள் ஏற்படலாம்
இன்று ஆர்வத்துடன் செயல்களை செய்வீர்கள். லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய நட்பினால் பயன் பெறுவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் இன்பமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது.
இன்று வெற்றி பெற அதிக முயற்சிகள் தேவையாகும். தாங்கள் அறிவினை பயன்படுத்தி செயலாற்றவும். இல்லையெனில் தேவையற்ற வம்புகள் வந்து சேரும். குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.
இன்றைய தினம் பல தடைகள் வர வாய்ப்புண்டு. மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு எனவே கூடுதல் கவனம் அவசியமாகும்.
இன்று பலன்கள் தாமதமாக கிடைக்கும் நாளாகும். கவன சிதறல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நண்பர்களினால் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விவாதங்களை கைவிடவும். நாள் இறுதியில் நற்பலன்கள் உண்டு.
இன்று ஆக்கப்பூர்வமான செயல்கள் நடக்கும். நேர்மைக்கு தகுந்த பாராட்டுகள் கிடைக்க போகிறது. தொழிலில் நல்ல லாபகரமான நாளாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.
இன்று சுப பலன்கள் கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படுகின்ற நாளாக இருக்கும். காதலை வெளிபடுத்த நல்ல தீர்வு கிடைக்கும். குடும்ப உறவுகளில் மேன்மை இருக்கும். பிரமாதமான நாளாக இருக்க போகிறது.
25/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
வாசிங்டன்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சாவு எண்ணிக்கை அமெரிக்காவில் உச்சகட்டம் 50,000த்தை கடந்தது, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம்.
வெள்ளிகிழமை மட்டும் 24 மணி நேரத்தில் 3,176 பேர் இந்த நோயால் அமெரிக்காவில் இறந்துள்ளனர் என பல்கலைகழகம் தெரிவித்தது.
சீனாவின் வுகான் நகரத்தில் துவங்கி உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா உலகில் எங்கும் இல்லாத அளவில் அமெரிக்காவில் அதிக உயிர்பலிகளை வாங்கியுள்ளது.
உலக அளவில் 2.7 மில்லியனை தொட்டது கொரோனா
உலக அளவில் 2.7 மில்லியன் மக்களையும் தாண்டி இந்நோய் பரவி வருகிறது, மேலும் இந்நோயால் 192,000 பேர் உலக அளவில் இறந்துள்ளனர் என பல்கலைகழகம் தெரிவித்தது.
அமெரிக்காவில் உச்சகட்டம்
தற்போது வரை அமெரிக்காவில் 8,69,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 50,031 மக்கள் இறந்துள்ளனர்.
அமெரிக்காவில் 95% மக்கள் வீட்டுக்குள் அரசு உத்தரவுபடி முடக்கப்பட்டு உள்ளனர் மேலும் சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது இது மே மாதம் 1 ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரப்பிரதேசம்: சீதாபூரில் 13 வயது பெண் குழந்தை இரண்டு இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்புனர்ச்சி மேலும் இந்த செயலை நான்கு நபர்கள் காணொளியில் பதிவு செய்ததாக தெரிகிறது.
இந்த குற்ற செயல்களில் ஈடுபட்ட ஆறு இளைஞர்களையும் காவல்துறை கைது செய்தது.
இச்சம்பவம் புதன் மதியம் 2.00 மணியளவில் மிஸ்ரிக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்தது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
“அந்த 13வயது பெண் குழந்தை இயற்கை உபாதையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்ப வருகையில் வலுக்கட்டாயமாக, கைவிடப்பட்ட பள்ளிக்கட்டிடத்திற்கு அந்த ஆறு நபர்களால் தூக்கிச் செல்லப்பட்டாள்,” காவல்துறை கண்கானிப்பாளர் எல் ஆர் குமார் தெரிவித்தார்.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மற்ற நால்வரும் கானொளிக்காட்சியில் இதை பதிவு செய்ததாகவும் அவர் அவர் தெரிவித்தார்.
“இந்த ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டு விசாரனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களை குழந்தை பாலியல் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு போஸ்கோ(POSCO) சட்டம் மற்றும் மேலும் தகுந்த இந்திய சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.
மேலும் அந்த நபர்களால் அவர் யாரிடமும் நடந்தவற்றை தெரிவிக்க கூடாது என கடுமையாக மிரட்டியதாகவும், தற்போது அந்தப் பெண் குழந்தை மருத்துவ பரிசோதனை செய்ய அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
தோனி எப்போது அணிக்கு மீண்டும் திரும்புவார் என அவரது ரசிகர்கள் மற்றும் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர். தோனி வென்று தராத ஐசிசி கோப்பைகளே இல்லை.
அவர் சமீபகாலமாக மிக நிதானமாக விளையாடுகிறார் என ஒருசாராரும் , இல்லவே இல்லை என்று ஒரு சாராரும் நித்தமும் ஆன்லைனில் வாக்குவாதம் நடத்திக் கொண்டு இருக்க.பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
சில தினங்களுக்கு முன்னாள், ஹர்பஜனும் , ரோஹித் ஷர்மாவும் சமூக வலைத்தளம் ஒன்றில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்தனர்.
அப்போது ஒரு ரசிகர் “தோனி மீண்டும் எப்போது ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்பார் என்று கேட்டார் ?”
அதற்க்கு “ அது அவரின் முடிவு தான், ஆனால் உலகக்கோப்பையில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக அவர் ஆடிய அரை இறுதிப் போட்டி தான் அவரது கடைசி ஒரு நாள் போட்டி என்று அவர் அறிந்திருக்க கூடும். அவர் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க்க சாத்தியம் இல்லை என்றே நினைக்கிறன். அவர் ஐபில் லில் தொடர்ந்து விளையாடு வார் அதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும் “ என பதில் அளித்து இருக்கிறார்.
சென்னை: சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் முழு ஊரடங்கை ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 மாலை 9 மணி வரை அமல்படுத்தப்படும் என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாநகரங்களில் , இந்த முழு ஊரடங்கை ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 28 மாலை 6 மணி வரை கடைபிடிக்கப்படும். மிகவும் அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதி வழங்கப்படும், என முதல் அமைச்சர் அறிவிப்பில் தெரிவித்து இருந்தார்.
மொத்த வியாபாரிகள், நடமாடும் காய்கறிகடைகள்
கோயம்பேடு மொத்த வியாபாரக்கடைகள் போன்றவை மட்டும் வழிகாட்டுதல்கள் படிதிறக்க அனுமதி அளிக்கப்படும். அதுபோல், நடமாடும் காய்கறி மற்றும் பழக்கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் வேற எந்த கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
மருத்துவ சேவைகள்
மருத்துவமனைகள், சோதனைக்கூடங்கள், மருந்து விற்பனையகங்கள் , மருத்துவ ஊர்தி போன்ற மருத்துவ சேவைகள் மற்றும் இறுதி ஊர்வல வாகனம் சேவை ஆகியவை அனுமதிக்கப்படும்.
தேவையான பணியாளர்கள் மட்டும்
தலைமைச் செயலகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, காவல் துறை, வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை , மின்வாரியம், ஆவின் பால், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தண்ணீர் விநியோகத்துறை ஆகியவை தேவையான பணியாளர்களுடன் மட்டும் இயங்கும்.
மத்திய அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவை 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அம்மா உணவகம், ஏடிஎம் இயங்கும்
அம்மா உணவகங்கள் மற்றும் ஏடிஎம்(ATM) ஆகியவை எப்பொழுதும் போல் இயங்கும்.
உணவகங்கள் தொலைபேசியில் மூலம் கேட்பப்படும் உணவுகளை மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படும்.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களை பராமரிப்பு செய்ய உதவியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மற்ற நிறுவனங்கள்
தானியங்கி நிறுவனங்கள் மற்றும் மற்ற நிறுவனங்கள் உரிய அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்று இயங்கும்.
“இவைகளைத்தவிர மற்ற அனைத்து வித செயல்பாடுகளுக்கும் தடை”, என முதல் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் மற்ற அரசு அலுவலகங்கள் மற்றும் பதிவுத்துறை ஆகியவை இயங்காது. தகவல் தொழில்நுட்ப அலுவலர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்படும். தனியார் நிறுவனங்கள் எதுவும் செயல்படாது.
மற்ற பகுதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கே பின்பற்றபடும்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள்
மேலும் முதல்வர் தெரிவிக்கையில் பிற கட்டுப்பாட்டு பகுதிகளில் மிகுந்த கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும், மற்ற மாநகராட்சிகளில் கிருமி நாசினிகள் ஒர் நாளில் இரு முறை தெளிக்கப்படும் மற்றும் மக்கள் நடமாட்டம் மற்ற பகுதிகளில் தடைசெய்யப்படும்.
இந்த கட்டுபாடுகளை மீறுபவர்களின் வாகனங்கள் பரிமுதல் செய்யப்படுவது மட்டும் இல்லாமல் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களிடம் வேண்டுகோள்
கொரோனா பரவல் எளிதாக தொற்றக்கூடியதாக உள்ளதால், மக்களின் முழு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என முதல் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.