Home Blog Page 121

ஷாலினியின் முதல் காதல் அஜித் அல்ல! 2000-ல் வெளிவந்த பத்திரிக்கை செய்தி

0

shalini first love: ஷாலினியின் முதல் காதல் அஜித் அல்ல இப்படி ஒரு தலைப்பில் தான் 2000-ஆம் ஆண்டு ஒரு பத்திரிக்கையின் அட்டைப்படம் இருந்தது.

சினிமா செய்திகள் என்றால் அப்போது அந்த பத்திரிக்கை தான் நம்மர் ஒன். கிசு கிசு படிக்க, நடுபக்க ஸ்டில் பார்பதற்கு என்றே அந்த பத்திரிக்கையை வாங்க ஒரு கூட்டம் அலைமோதும்.

2000-ஆம் ஆண்டு தான் அஜித்-ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திடீரென இந்த பத்திரிக்கை இப்படி ஒரு செய்தியை வெளியிட்டது.

தமிழ் சினிமா முழுவதுமே ஒரு பரபரப்பு தான். shalini first love பற்றி அறிந்து கொள்ள எல்லோரும் ஆவலுடன் அந்த பத்திரிக்கையை வாங்கி படித்தனர்.

ஷாலினியின் முதல் காதலர் யாராக இருக்கும் என அனைவருக்குமே அறிந்துகொள்ள ஒரு ஆவல். வாங்கி படித்தபிறகு தான் பலருக்கும் புரிந்தது அவர் சினிமாவை அளவுக்கு அதிகமாகக் காதலித்தார் என்பது.

திருமணத்திற்கு பின் அஜித் ஷாலினியை நடிக்க கூடாது எனக் கூறியதாக அந்த நேரத்தில் பரபரப்பாகவும் பேசப்பட்டது.

இந்த செய்திக்குப் பிறகு ஷாலினியை நடிகர் அஜித் நடிக்க விடாமல் செய்வது தவறு என கோடம்பாக்கம் டீக்கடை பெஞ்ச் டாப்பிக்கா அமைந்தது.

திருமணத்திற்கு பிறகு வெளிவந்த அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் படத்திலும் கூட சில காட்சிகள் முடிவையாமல் இருந்தபோது அஜித் அந்த படங்களை வெளிவரவிடாமல் செய்ய முயற்சித்ததாகவும் கூட செய்திகள் வெளிவந்தது.

ஆனால், அதன் பிறகு ஷாலினியே அதற்கு மறுப்பு தெரிவித்தார். நடிக்க கூடாது என நானே எடுத்த முடிவு. அஜித் என்னை கட்டாயப்படுத்தவில்லை எனக் கூறினார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா கூட நடிக்க வந்து விட்டார். அதுபோல் நடிகை ஷாலினியும் தனக்கு என ஒரு கோட்டை கட்டி வைத்து இருந்தார்.

ஷாலினியே நடிக்க கூடாது என முடிவு எடுத்து இருந்தாலும், நடிகர் அஜித் மீண்டும் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே பலரின் விருப்பம்.

நடிப்புக்கு ஏது வயது? எந்த வயதிலும் நடிகராகலாம் என்பதே சினிமாவின் எழுதப்படாத விதி. இப்போதும் கூட ஷாலினிக்கு கோலிவுட் கதவு திறந்தே உள்ளது. கதவிற்குள் நுழையும் முடிவை அவர் தான் எடுக்க வேண்டும்.

3

ஜோதிகா கோவில் குறித்து அப்படி என்ன பேசினார்? முழு வீடியோ

0

நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் ஏன் கட்டினார்கள்? அதற்கு பதிலாக மருத்துவமனை கட்டியிருக்கலாம் எனக் கூறியதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை ஆகி உள்ளது.

உண்மையில் ஜோதிகா அந்த விருது நிகழ்ச்சியில் என்ன பேசினார். அவர் கோவில் கட்ட வேண்டாம் எனக் கூறினாரா?

ஜோதிகா வீடியோவில் பேசியதாவது. “பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் புகழ் பெற்றது. அதை பார்க்காமல் போகாதீர்கள் என்றார்கள்.

ஏற்கனவே நான் பெரிய கோவிலை பார்த்துள்ளேன். அவ்வளவு அழகாக உள்ளது. உதய்ப்பூரில் உள்ள அரண்மனை போல் நன்கு பராமரித்து வருகிறார்கள்.

அடுத்தநாள் மருத்துவமனையில் என்னுடைய படப்பிடிப்பு. அது சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்ததை என் வாயால் சொல்ல முடியாது எனக் கூறினார்.”

மேலும், ராட்சசி படத்தில் பேசிய வசனத்தையும் சுட்டிக்காட்டினார். எல்லோருக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். கோயிலுக்கு அவ்வளவு காசு கொடுக்கிறீர்கள். உண்டியலில் பணம் போடுகிறீர்கள். பெயிண்ட் அடிக்கிறீர்கள். கோயிலில் அவ்வளவு காசு போடுகிறீர்கள் . தயவுசெய்து அதே காசை கட்டடத்துக்கு கொடுங்கள். பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்கு கொடுங்கள். எனக் கூறி முடித்தார்.

அவர் ராட்சசி படத்தில் பேசிய வசனைத்தையே மீண்டும் மேடியையில் சுட்டிக்காட்டி பேசினார். கோவிலுக்கு கொடுக்கும் அதே காசை மருத்துவமனை பள்ளி கட்ட கொடுங்கள் என்று தான் கூறி உள்ளார். கோவிலுக்கு காசு கொடுக்காதே எனக் கூறவில்லை.

ஆனால் சமூக வலைதளங்களில் இந்த கருத்து தவறான முறையில் பரப்பி விட்டு ஜோதிகாவிற்கு எதிராக திருப்பிவிட்டனர்.

ராட்சசி படம் வெளியான போது இந்த கேள்வியைக் கேட்காதவர்கள் இப்போ கேட்க என்ன காரணம் எனத் தெரியவில்லை?

ஜோதிகா பேசிய முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டு உள்ளது.

3

ஆம்புலன்ஸ் உள்ளே கொரோனா நோயாளி; தெறித்த புள்ளிங்கோ – கதற வைத்த போலீஸ்

0
ஆம்புலன்ஸ் திருப்பூர் காவல்துறை

ஆம்புலன்ஸ் உள்ளே கொரோனா நோயாளி; தெறித்த புள்ளிங்கோ – கதற வைத்த திருப்பூர் போலீஸ். நூதனமாக கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்.

திருப்பூர் காவல்துறை கொரோனா நோயை பற்றி சட்டை செய்யாமல் வெளியில் சுற்றுவோருக்கு அதன் தீவிரத்தை உணர்த்த முடிவு செய்தனர்.

அவர்கள் விழிப்புணர்வு செய்ய சாலை ஓரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தி வைத்தனர். அதற்குள் ஒரு கொரோனா நோயாளி ஒருவர் உள்ளது போல் செட்டப் செய்து இருந்தனர்.

போலீஸ் நிற்பதை அறியாமல் மூன்று புள்ளிங்கோ ஒரே பைக்கில் லட்டாக போலீசிடம் சிக்கினர். அவர்களை முதலில் விசாரித்தனர் போலீஸ்.

அப்போதும் கூட புள்ளிங்கோ பெரிய அளவில் அலட்டாமல் பம்மியவாறு பதில் சொல்லிக்கொண்டு இருந்தனர்.

உடனே போலீஸ் உயர் அதிகாரி இவனுங்க திருந்த மாட்டானுங்க இவனுங்கள கொரோன பேசன்ட் இருக்குற வண்டிக்குள்ள ஏத்துங்க அப்போதான் திருந்துவானுங்க எனக் கூறினார்.

ஆம்புலன்ஸ் கதைவைத் திறந்ததும் உள்ளே இருந்த நபர் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அதைப் பார்த்ததும் புள்ளிங்கோ தெறித்து ஓடினர்.

அவர்களை கொத்தாக வண்டிக்குள் தள்ளி போலீசார் கதவை சாத்தினார். உள்ளே சென்ற புள்ளிங்கோ மரண பயத்தில் கூக்குரல் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

எனக்கெல்லாம் கொரோனா வருமா? என வீராப்பாக சுற்றித் திரியும் இதுபோன்ற புள்ளிங்கோ இப்படித்தான் நோயாளியைப் பார்த்தா நடுங்குவார்கள் என்பற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம்.

3

பீட்டர்சனை சரியாக பயன்படுத்த தவறிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் – வாகன் .

0

பீட்டர்சனை சரியாக பயன்படுத்த தவறிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் – வாகன் .

“ ஒரு தொடரை வென்றால் அதை அணைத்து வீரர்களும் இனைந்து  கொண்டாடுவோம் , சந்தோஷத்தை பகிர்வோம் அது இயல்பு. அதே நேரத்தில் தோல்வி அடைந்தாலும் அதே போல தான ஒன்றுபட்டு நிற்க வேண்டும் … ஆனால் அப்படி நடப்பதே இல்லை. வென்றால் உல்லாச கூப்பாடு , அதே தோற்றால் “பலி ஆடு” தேட துவங்கி விடுகிறோம் ! 

 

அப்படி தான் கெவின் பீட்டர்சன் பலி ஆடாக ஆக்கப்பட்டு, அணியிலிருந்து ஓரங்கட்டப் பட்டார். பெரிய தொடர்களில் அவரை நன்றாக பயன்படுத்திக் கொண்டு. ஆஷஸ் தொடரில் தோற்றவுடன் அவரை கட்டம் கட்டிவிட்டனர்.

ஒரு தொடரை இழப்பதற்கு ஒரு நபர், ஒரே ஒரு வீரர் எப்படி பொறுப்பாக  முடியும் ? இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர் விஷயத்தில் நடந்துக்கொண்ட விதம் மிகவும் விசித்திரமாக உள்ளது.

உண்மையில் கெவின் மிக தனித்துவமான வீரர், எல்லா வீரர்களும் பார்ம் அவுட் ஆவது சகஜம். அவரை சரியான முறையில் நடத்தி இருந்தால் இங்கிலாந்து இன்னும் பல பெரிய வெற்றிகளை பெற்று இருக்கும்.” இவ்வாறு ஆஸ்திரேலியா செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர், கேப்டன் மைக்கேல் வாகன்.

 

சா.ரா.

3

E-Gram சுவராஜ் அப்; வலுவான கிராமங்களே ஜனநாயகத்தின் தூண்

0
E-Gram சுவராஜ் அப்

E-Gram சுவராஜ் அப்; வலுவான கிராமங்களே ஜனநாயகத்தின் தூண், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் இயற்றப்பட்ட நாளை முன்னிட்டு E-Gram சுவராஜ் வலைப்பக்கம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார் மோடி.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் இயற்றப்பட்ட நாள் முன்னிட்டு பேசிய பிரதமர் மோடி கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தாங்களே நிர்வாகம் செய்யும் உரிமையை பெறுகிறார்கள்.

மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் பகிர்ந்துகொள்வது இதன் முக்கிய நோக்கமாகும்.

E-Gram சுவராஜ் அப்

கொரோனா பரவும் இந்த கடினமான சூழலில் ஊராட்சிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. கிராமங்களே ஜனநாயகத்தின் தூண்கள் என்றார்.

கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான வளர்ச்சி இடைவெளியை குறைக்க வேண்டும். கிராமப்புற சுயாட்சியை உறுதிப்படுத்துவதே இ-கிராம் ஸ்வராஜ் செயலியின் நோக்கமாகும்.

இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான கிராமங்கள் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளன. இதனால் எளிதாக அனைத்து தகவல்களையும் பிற சேவைகளையும் எளிதில் கொண்டு சேர்க்க இயலும்.

3

மும்பை இந்தியன்ஸ் ( MI ) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ( CSK ) பற்றி மனம் திறந்த ஹர்பஜன் சிங்.

0

மும்பை இந்தியன்ஸ் ( MI ) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ( CSK ) பற்றி மனம் திறந்த ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங் மிகப் பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் , சுழற் பந்து வீச்சாளர். கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார், எனவே  தற்போது  தமிழ் மொழியில் ட்வீட் செய்கிறார் , கவிதை போடுகிறார் , சூப்பர் ஸ்டார் வசனங்கள் பதிவிடுகிறார் . மும்பை அணிக்கும் சுமார் 10 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.

“ மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் நெடுநாட்கள் விளையாடியுள்ளேன் , அவர்கள் மிக ப்ரோபாஷனலாக இருப்பார்கள், நாமும் அப்படிதான் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் சூப்பர் கிங்ஸ் அணியில் அப்படி அல்ல, மீட்டிங்குகள்  நெருக்கடிகள் என எதுவும் கிடையாது. மேட்ச் நடக்கும் அன்றும் கூட மிக இயல்பாக தான் இருப்போம்.

MI ஐ பொறுத்தவரை வெற்றி பெற சொன்னால் வெற்றி பெற்றே ஆகவேண்டும். ஆனால் CSK அப்படி அல்ல. ஷான் வாட்சன் சென்ற தொடர் முழுவதும் சரியாக விளையாடவில்லை ஆனால் இறுதிப்போட்டியில் சதம் விளாசினார். இதைப்போல நன்றாக விளையாடும் வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் . நான் இரு அணிகளுக்கு விளையாடியதிலும் மிகுந்த மகிழ்ச்சி.

என்னைக்கேட்டால் இந்திய அணியின் ரிஷப் பண்ட் தற்போது சில போட்டிகளில் சரியாக விளையாடாவிட்டாலும் அவருக்கு போட்டியை வெல்லும்படி விளையாட முடியும், அவருக்கு மேலும் அவகாசம் அளிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

சா.ரா.

 

3

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுயநலத்திற்காக விளையாடுபவர்கள் கூறும் பாகிஸ்தான் வீரர்

0

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுயநலத்திற்காக விளையாடுபவர்கள் கூறும் பாகிஸ்தான் வீரர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் இந்திய வீரர்கள் அனைவரும் தங்களுடைய தனி ரெகார்டுக்காக விளையாடுபவர்கள். ஆனால் பாகிஸ்தான் அப்படி இல்லை.

நாங்கள் வெறும் 30-40 ரன்கள் அடித்தாலும் அது அணியின் வெற்றிக்கு என்னும் எண்ணத்தோடு அடிப்போம். ஆனால் இந்தியர்கள் சதம் அடித்தாலும் செல்ஃபிஷ் ஆட்டம் ஆடுவார்கள்.

தங்களுடைய சதத்திலேயே கவனமாக இருப்பார்கள் அணியின் வெற்றியை விட என்று கிரிக்கெட் வர்ணணையாளர் ரமீஷ் ராஜாவுடன் யூடியூப் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்தார்.

இதுவே இந்திய வீரர்களுக்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்று கூறினார்.பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் இந்திய பேட்ஸ்மென்களே ஆதிக்கம் செலுத்துவர் என்று இன்ஷமாம் கூறினார்.

மேலும், 1992 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்ற தருணம் தொடர்பாக நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

இன்ஷமாம் உல் ஹக் 1991 முதல் 2007 வரை விளையாடிய இவர் 20 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே பாகிஸ்தான் வீரர் இன்ஷாம் உல் ஹக் தான்.

3

கொரோனா நிதி: விஜய் ரசிகரை கொன்ற ரஜினி ரசிகர்

0
கொரோனா நிதி

கொரோனா நிவாரண நிதி: நடிகர்கள் தங்களால் முடிந்த பண உதவியை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.

இதில் கூட அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களின் சட்டையிட்டு மல்லுகட்டி வருகின்றனர்.

உன் தலைவர் வெத்து, என் தல கெத்து.. தல, தலைவர் ரெண்டு பேரவிட தளபதி தான் டாப்பு என ரசிகர்கள் வீட்டில் பொழுது போகவில்லை என்றால் சமூக வலைத்தளத்தில் ஒன்று கூடி நாறடித்துவிடுகின்றனர்.

இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருபடி மேலே போய் விஜய் ரசிகரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் நடிகர் விஜய்யின் ரசிகர். இவருடைய ஊரில் வசிக்கும் தினேஷ்பாபு விஜய் ரசிகர்.

இருவரும் நல்ல நண்பர்கள். தீவிர ரஜினி-விஜய் ரசிகர்களும் கூட. ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் பிளாக்கில் சரக்கு வாங்கி குடித்து உள்ளனர்.

போதை தலைக்கேறும் வரை குடித்து விட்டு இருவரும் தங்களுக்கு பிடித்த நடிகர்களைப் பற்றி உயர்வாகப் பேசி உள்ளனர்.

இந்த பேச்சு ஒரு கட்டத்தில் போட்டியாக மாறி விஜய் நல்லவரா? ரஜினி நல்லவரா? யார் அதிக உதவிகள் செய்து உள்ளனர் என வார்த்தை போராக மாறிவிட்டது.

இதில் ஒருவரை ஒருவர் மற்ற நடிகரைப் பற்றி தரக்குறைவாக பேசி சண்டையிட்டு உள்ளனர். இதில் வாக்கு வாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

ரஜினி ரசிகர் யுவராஜ், விஜய் ரசிகர் தினேஷ் பாபுவை தள்ளிவிட்டு உள்ளார். இதில் நிலை தடுமாறி தினேஷ் பாபுவின் தலை கல்லில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

ரஜினி ரசிகர் யுவராஜ்-யை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கள்ளசாராயம் ஏதும் உட்கொண்டு சட்டையிட்டனரா? அவர்களுக்கு மதுபானம் எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

அர்னாப் கோஸ்வாமி; என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் சோனியா காந்தியே அதற்கு காரணம்

0

அர்னாப் கோஸ்வாமி; என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் சோனியா காந்தியே அதற்கு காரணம் என உச்சநீதிமனற்றத்தில் மனு அளித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள கிராமத்தில் நடந்த ஒரு பிரச்சனையைப் பற்றி விவாதம் ரிபப்ளிக் டி‌வியில் நடத்தப்பட்டது. அதில் துறவியை அந்த கிராம மக்கள் அடித்துக்கொண்தைப் பற்றி காரசாரமாக விவாதம் சென்றது.

இந்த விவாதத்தில் அர்னாப் கோஸ்வாமி அடிக்கடி சோனியா காந்தியை குற்றம் சாட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் கட்சிக் காரர்கள், தொண்டர்கள் அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்தனர்.

இதனிடையே அவர் வேலை முடித்து வீட்டிருக்கு செல்லும் பொழுது அவரை மர்ம நபர்கள் தாக்கியுள்ளதாக போலீஸில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

மேலும் தனக்கும் தான் குடும்பதிற்கும் ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு சோனியா காந்தியே முழுப் பொறுப்பு என நீதி மன்றத்தில் மனு அளித்து விட்டார்.

3

முடி வளர்ந்தாலும் பரவாயில்லை; இந்த அளவுக்கு இறங்கி வந்த சிவகார்த்திகேயன்

0
We Love Doctors

We Love Doctors: முடி வளர்ந்தாலும் பரவாயில்லை நாட்டு மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம், டாக்டர்களையும் மருத்துவ பணியாளர்களையும் காப்போம் என சிவகார்த்திகேயன் வலியுறுத்தி உள்ளார்.

நாடே கொரோனாவால் தத்திளித்து கொண்டு இருக்கும்போது மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களும் எதற்கு அஞ்சாமல் நம்மை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா நோயில் இருந்து நம்மை பாதுக்காக்கும் மருத்துவக் கடவுள்களை சில அறிவில்லா மக்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள். அவர்களை தாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுகிறார்கள்.

சமீபத்தில் கூட இறந்த டாக்டர் உடலை புதைக்க விடாமல் கல்லால் அடித்த சம்பவம் நடந்தது. டாக்டர்களுக்கு வீடு வாடகைக்கு விட்டவர்கள், அக்கம் பக்கத்தினர் வேறு இடம் தேடிகொள்ளுங்கள் என சட்டை இட்ட சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.

இது போன்ற செயல்கள் வேண்டாம் எனவும் மருத்துவர்களை மதிப்போம் அவர்கள் மீது அன்பு செலுத்துவோம் என நடிகர் சிவ கார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

We Love Doctors

3