Home Blog Page 122

அஜித் முதல் ஆத்விக் பிறந்தது வரை – ajith family Rare Photos

0
ajith family Rare Photos

ajith family Rare Photos: நடிகர் அஜித் குமார் ஷாலினி தம்பதியரின் குடும்ப புகைப்படம். அஜித்-ஷாலினி சிறுவயது படங்கள் முதல், ஆத்விக்-அனௌஷ்கா படங்கள் வரை

கீழே இணைக்கப்பட்டு உள்ளது.

3

இன்று சச்சின் பிறந்தநாள் ! ட்ரெண்டாகும்  #HapyBirthdaySachin !! 

0

 

சச்சின் டெண்டுல்கரைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம் , அந்த அளவிற்கு அசத்தியுள்ளார் அவர். அவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவிந்ததால் மட்டுமே இவ்வளவு புகழ்ப் பெற்றுவிட்டார் என்று நினைத்தால் அது தவறு. அவர் கிரிக்கெட் விளையாட துவங்கிய காலத்தில் அவரைவிட அதிக ரன்கள் குவித்தவர்கள் கூட இவர் அளவு புகழ் பெறவில்லை. கிட்டத்தட்ட அவர் ஓய்வு பெற்று 7 ஆண்டுகள் ஆகப்போகிறது ஆனால் இன்றும் #HapyBirthdaySachin, #GodOfCricket, #Sachin Tendulkar. ஆகிய ஹாஷ் டாகுகள் தான் இன்றும் ட்ரெண்டிங் .

 சச்சின் அவர்களின் நன்னடத்தை தான் அவர் இன்றளவும் புகழின் உச்சியில் இருக்க காரணம். அவர் அடித்த ரன்களை வேறு ஒரு வீரர் கடந்தாலும் , சச்சினின் புகழ் மங்காது.

ரசிகர்களை அவர் மகிழ்விக்க ஒரு சிறிய புன்னகையுடன் கூடிய கை அசைவு போதும் அரங்கமே “Sachin… சச்சின்…” என்று ஆர்ப்பரிக்கும். இன்றும் அவரது பிரிவு உபசார உறையை கேட்டு கண்கள் கசிவோர் பலர்.

விளையாட்டில் எந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் இருந்தாரோ , அதே போல தான் அதன் விதிகளையும் கடைப்பிடித்தார். ஒரே ஒரு முறை கூட நடுவர்களின் தீர்ப்பிற்கு எதிராக எந்த சலனமும் செய்ததில்லை.

மட்டையில் பந்து பட்டது என்று தெரிந்தால் நடுவரின் முடிவிற்காக காத்திராமல் பெவிலியன் நோக்கி நடக்கத் துவங்கி விடுவார். அவர் இருந்த நிலைக்கு அவர் நினைத்திருந்தால் பல பந்தா காமித்திருக்கலாம் , இருந்தும் என்றும் சம நிலை தவறாமல் இருந்தார்.

யாரையும் குறைகூறியது கிடையாது, எந்த சர்ச்சையிலும் சிக்கியது கிடையாது. சிறந்த ஜென்டில் மேனாகவே விளையாடி முடித்தார்.

அவரது  33 வது வயது முதலே கடுமையான எதிர்மறை விமர்சனங்களை நேர்மறையாக எதிர்த்து வருகிறார் ! அந்த நேர்மறை மற்றும் நேர்மைதான் சச்சின் புகழ் இன்றும் மங்காமல் இருக்க காரணமென்றால் அது மிகை இல்லை.

சா.ரா 

 

3

Happy Birthday Sachin; சச்சினின் சில சுவாரசியமான தகவல்கள்

0

Happy Birthday Sachin; சச்சினின் சில சுவாரசியமான தகவல்கள், Interesting Facts of Sachin Tendulkar, Unknown Facts of Sachin Tendulkar. மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.

  • 1987ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் எடுத்து நடத்திய உலகக்கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் தன்னார்வமாக எல்லையில் பந்து சேகரிக்கும் பணியை செய்தார்.
  • சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர், பாடகர் சச்சின் தேவ் பர்மனின் மிகப்பெரிய ரசிகராக இருந்ததே லிட்டில் மாஸ்டர் சச்சினுக்கு பேர் வைக்க காரணமாக அமைந்தது.
  • 16 வயதில் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியை ஆடிய சச்சின் டெண்டுல்கர் முதல் இரண்டு போட்டிகளிலும் ரன் எதுவும் எடுக்காமல் இரண்டாம் பந்திலேயே அவுட் ஆகியுள்ளார்.

sachin unknown facts

  • 1988ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடந்த பயிற்சி போட்டியில் சச்சின் பாகிஸ்தானுக்காக சப்ஸ்டிட்யூட் வீரராக ஃபீல்டிங் செய்தார்.
  • 1988ஆம் ஆண்டு பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சச்சின் மற்றும் வினோத் காம்ப்ளி இருவரும் ஜோடி சேர்ந்து 664 ரன்கள் அடித்தனர். இதில் சச்சின் மட்டும் 324 ரன்கள் அடித்திருந்தார்.

sachin kambli

  • இங்கிலாந்தில் நடக்கும் யோர்க்ஸய்ர் கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்ட இளம் இந்தியா வீரரும் முதல் ஓவர்சீஸ் வீரரும் ஆவார்.
  • எம்‌ஆர்‌எஃப் பந்து வீச்சு அகாடெமியில் ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி சச்சின் டெண்டுல்கரை நிராகரித்தார். ஆனால் சச்சின் தனது கிரிக்கெட் கரியரில் 154 விக்கெட்  ஒருநாள் போட்டியிலும் 46 விக்கெட் டெஸ்ட் போட்டியிலும் எடுத்தார்.
  • 1997ஆம் ஆண்டின் விஸ்டம் கிரிக்கெட்டர் விருதை வென்றதுடன் 11 பேர் கொண்ட விஸ்டம் உலக அணியில் இடம்பெற்ற முதல் இந்திய வீரர் ஆவார்.
  • 2010ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் 200 அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

sachin first 200

  • ஆஸ்திரேலியாவின் ‘அன் ஆசீஸ் கோஸ் போல்லி’ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.  அது பாக்ஸ் 8 சேனலில் ஒளிப்பெருக்கம் செய்யப்பட்டது.
  • சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை அதிக முறை எடுத்த வீரர் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ஆவார்.

sachin bret lee

  • உலக கிரிக்கெட்டில் 200 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான்.
  • சச்சின் டெண்டுல்கரின் ஜெர்ஸி எண் 10 அவர் விளையாடி 5 வருடங்களாக யாருக்கும் அளிக்கபடிவில்லை. தற்காலிகமாக அதை மற்றவர்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

sachin jersey no

3

தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), 71 துணை பேராசிரியர்களை பணியில் அமர்த்தியது

0
தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), 71 துணை பேராசிரியர்களை பணியில்

திருச்சி: தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT)திருச்சி , 71 துணை பேராசிரியர்களை இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் பணியில் அமர்த்தியுள்ளது.

இதில் 5 பேர் பணியில் சேர்ந்து விட்டனர், மீதம் உள்ளவர்கள் ஊரடங்கு முடிந்தபின் பணியில் சேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான(EWS) இடங்களை சேர்த்த பின்பு காலி இடங்களின் எண்ணிக்கை 134இல் இருந்து 147ஆக உயர்ந்துள்ளது.

தேசிய தொழில்நுட்பக் கழகம் கடந்த வருடம் ஜனவரி மாதம் செய்திருந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை ரத்து செய்திருந்தது,அதனை தேசிய தொழில்நுட்பக் கழகம் கடந்த ஆண்டு இறுதியில் மறுஅறிவிப்பு செய்து இருந்ததாக தெரிகிறது.

சென்னை உயர்நீதிமன்ற தடை

சென்னை உயர்நீதிமன்றத்தில், பல் வேறு பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை எத்தனை என குறிப்பிடவில்லை என தொடரப்பட்ட பொதுநல வழக்கில் நீதிமன்றம் சென்ற வருடத்திற்கான ஆட்சேர்ப்பை தடைதெய்து தீர்ப்பளித்து இருந்தது.

கடந்த அறிவிப்பின் பொழுது 3,500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தன. இந்த விண்ணப்பதாரர்கள் கடந்த வருடத்தின் இருதியில் வெளியிடப்பட்டிருந்த புதிய அறிவிப்பில் தங்களது விண்ணப்பங்களை புதிப்பிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

“நாங்கள் 17 துறைகளுக்கான 71 பதவிகளை தீவிரமான நேர்கானலுக்கு பின் வழங்குவோம்,” என நிர்வாக இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் தெரிவித்தார்.” வெளி நாட்டு பல்கலைகழகத்தில் படித்த இந்தியாவை சேர்ந்தவர்களை நேரில் நேர்கானலுக்கு நேரில் வருமாறு கேட்டுக்கொண்டுள்ளோம், சென்ற முறை காணொளிக்காட்சி அனுமதிக்கப்பட்டிருந்தது,” என அவர் கூறினார்.

3

24/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

24/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று மேன்மையான நாளாக இருக்கும். அனைத்து முயற்சிகளும் வெற்றியாக முடியும். தொழிலில் லாபம் மேம்படும். வீட்டில் அன்பும் அரவணைப்பும் காணப்படும். சுப காரியங்கள் துவங்கலாம். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்

ரிஷப ராசிபலன்

இன்று நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இலக்கை அடைவதில் கடினமான சூழல் நிலவும். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருக்கும். நிதிநிலை மோசமாக இருக்கும். சளி பிரச்சினை வர வாய்ப்புண்டு.

மிதுன ராசிபலன்

இன்று இன்பமான நாளாக இருக்கும். பணிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப சூழல் சிறப்பாக காணப்படும். கூடுதல் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடக ராசிபலன்

இன்று தனவரவு சிறப்பானதாக இருக்கும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள. காதலுக்கு உகந்த நாளாக இருக்கும். பொருளாதாரம் மேம்படும். உடல் வலிமை அதிகரிக்கும். நல்ல நாளாக இருக்கும்.

சிம்ம ராசிபலன்

இன்று சாந்தமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்கவும். தொழில் முன்னேற்றம் இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். பண வரவு பெரிதாக இருக்காது. கால் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

கன்னி ராசிபலன் 

இன்று தடைகள் நிறைந்த நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகமாக தேவையாகும். குடும்ப உறவுகளில் சிக்கல்களாக இருக்கும். தொழில் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. பணவரவு குறைவான இருக்கும்.

துலா ராசிபலன்

இன்று அசதியான நாளாக இருக்கும். பணிசுமையால் சோர்வுடன் இருப்பீர்கள். சூழ்நிலை சரியாக இருக்காது. மிதமான ஆதாயம் காணப்படும். குடும்பத்தில் அனுசரணை தேவையாகும். பணவரவு சுமாராக இருக்கும். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.

விருச்சிக ராசிபலன்

இன்று போட்டிகள் நிறைந்த நாளாக இருக்கும். கடினமான நாளாக இருக்கும். வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவையாகும். குடும்பத்தில் சிறு மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தனலாபம் குறைவாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று பயணத்தால் அலைச்சல் ஏற்படும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. நம்பிக்கையான எண்ணங்கள் வேண்டிய நாளாகும். பொறுப்புகள் அதிகமாக காணப்படும். தியானம் அவசியம் தேவையான நாள்.

மகர ராசிபலன் 

இன்று முயற்சிகள் அதிகமாக தேவையான நாளாகும். உழைப்பால் முன்னேற முயற்சிக்க வேண்டும். அன்றாட பணிகளை கவனமாக கையாளவேண்டும். தலைவலி பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. வீட்டில் சுமூகமான அணுகுமுறை நடந்து கொள்ளுங்கள்.

கும்ப ராசிபலன்

இன்றைய தினம் சிக்கலான நாளாக இருக்க போகிறது. வீட்டு விவகாரங்களில் கவனமாக செயல்பட வேண்டும். தொழில் மந்தமாக இருக்கும். செயல்களை கவனமாக கையாள வேண்டும்.

மீன ராசிபலன் 

இன்று பணியில் முன்னேற்றம் இருக்கும். வாகனங்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்புண்டு. அனைவரிடமும் நட்புறவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். அற்புதமான நாளாக இருக்கும்.

24/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

2 மணி நேரத்தில் 2,000ம் வாகனங்களில் வண்ணம் பூசப்பட்டது

0
வாகனங்களில் வண்ணம்

கோவை: காலை 9 மணி முதல் 11 மணிக்கு இடைபட்ட நேரத்தில், கோயம்புத்தூரில் இருக்கும் 12 நிரந்தர மற்றும் 22 தற்காலிக சோதனைச்சாவடிகளில் கொரோனா ஊரடங்கு தொடர்பாக நடைபெற்ற வாகனச்சோதனைகளில் சிக்கிய வாகனங்களில் வண்ணம் பூசப்பட்டது.

கொரோனா  ஊரடங்கையும் மீறி தேவை இல்லாமல் ஊர் சுற்றியதால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மஞ்சள் வண்ணம் பூசப்பட்டது.

வாகனத்தை பறிமுதல் செய்வோம்

மீண்டும் இதுபோல் போதிய காரணம் இல்லாமல் ஊர் சுற்றுவது தொடர்ந்தால் வாகனத்தை பறிமுதல் செய்வோம் என காவல் துறையினர் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

காவலர்கள் 1,788 இருசக்கர வாகனங்கள், 445 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும்  8 மூன்று சக்கர வாகனங்கள் மீதும் வண்ணம் பூசினர்.

வாகனங்களில் வண்ணம் நிறம் மாறும்

இதைப்போல் ஊரடங்கு முடியும் வரை சோதனை நடக்கும் என்றும் ஒவ்வொரு வாரமும் வண்ணத்தின் நிறம் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா நோயின் தீவிரத்தை அரசு எவ்வளவு முயன்றாலுல் அது நம் கையில் தான் உள்ளது என்பதில் கவனமாக இல்லாவிடில் விரைவில் இந்நோயிலிருந்து மீள்வது கேள்விக்குறியாகிவிடும்.

3

விஜய்யைப் போன்று அனைத்து நடிகர்களும் உதவ வேண்டும்: முதல்வர் கோரிக்கை!

0
Master Vijay Donation

Thalapathy Vijay Corona Donation; விஜய்யைப் போன்று அனைத்து நடிகர்களும் உதவ வேண்டும்: முதல்வர் கோரிக்கை! கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் விஜய் ரூ.1.30 கோடி வரையில் நிதியுதவி அளித்துள்ளார்.

நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது விஜய்யும் நிதியுதவி அளித்தவர்கள் பட்டியலில் தன்னை சேர்த்துக் கொண்டார்.

தளபதி விஜய் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரூ.1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்,

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,

கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்,

கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தம் ரூ.20 லட்சம்),

பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என்று நிதியுதவி அளித்துள்ளார். இதுதவிர தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு உதவுமாறும் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விஜய் கூறுவதற்கு முன்பிருந்தே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக அவரது ரசிகர்கள் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கினர். மேலும் பல நிதியுதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரி மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்துள்ள விஜய்க்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதில், புதுச்சேரியில் இருக்கும் அழகான இடங்களில் நடிகர்கள் தங்களது படங்களின் படப்பிடிப்புகளை நடத்துகின்றனர். புதுச்சேரி அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

இதனை மறக்காத வகையில், நடிகர் விஜய் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். அவருக்கு என் நன்றி.

அவர் அளித்துள்ள நிதியுதவியை மக்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

மற்ற நடிகர்களும் விஜய்யைப் போன்று புதுச்சேரி அரசுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பெண் பத்திரிக்கையாளர் புகைப்படம் சர்ச்சை: மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்!

0
Dulquer Salmaan and Chetna Kapoor

Dulquer Salmaan; பெண் பத்திரிக்கையாளர் புகைப்படம் சர்ச்சை: மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்! அனுமதியின்றி தனது படத்தில் பெண் பத்திரிக்கையாளரின் புகைப்படத்தை இடம்பெறச் செய்த துல்கர் சல்மான் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த சூழலில் புதுப் படங்களின் ரிலீஸ் தள்ளி போயுள்ளது. மேலும், டிஜிட்டல் மீடியாக்கள், புதிய படங்களை வெளியிடுவது குறித்து பேசி வருகின்றன.

Chetna Kapoor

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பு மற்றும் தயாரிப்பில் திரைக்கு வந்த புதிய படம் Varane Avashyamund.

துல்கர் சல்மான் உடன் இணைந்து இந்தப் படத்தில், சுரேஷ் கோபி, ஷோபனா, கல்யாணி பிரியதர்ஷன், ஆகியோர் நடித்திருந்தனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக Varane Avashyamund என்ற படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் மும்பையைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவரது புகைப்படம் இடம்பெற்றுள்ளதாகவும், படத்தைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், தனது அனுமதியின்றி இந்தப் புகைப்படத்தை துல்கர் சல்மான் பயன்படுத்தியுள்ளார்.

Reporter Chetna Kapoor

இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால், இது குறித்து நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், புகைப்படம் வெளியானதுக்கான முழுப்பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும், இதற்காக தயாரிப்பு நிறுவனமும், பெண் பத்திரிக்கையாளரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் எப்படி படத்தில் இடம்பெற்றது என்று தெரியவில்லை. இது குறித்து தயாரிப்பு தரப்பிலும், இயக்குநர் தரப்பிலும் விசாரணை நடந்து வருகிறது.

அதோடு, முழுக்க முழுக்க பெண்களை மதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

3

கேட்காமலேயே அள்ளிக் கொடுத்த ரஜினிகாந்த்: இயக்குநர்கள் சங்கம் பாராட்டு!

0
Rajinikanth

Rajinikath; கேட்காமலேயே அள்ளிக் கொடுத்த ரஜினிகாந்த்: இயக்குநர்கள் சங்கம் பாராட்டு! ரஜினிகாந்த் கேட்காமலேயே பொருளுதவி செய்துள்ளதைத் தொடர்ந்து இயக்குநர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் பொருளுதவி செய்துள்ளதைத் தொடர்ந்து இயக்குநர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது.

கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் என்று பலரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த மாதம் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று ஃபெப்சி கூட்டமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி வேண்டுகோள் வைத்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்துள்ளனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்தார்.

ஆனால், அவர் தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு ஒன்றும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், இயக்குநர்கள் சங்கத்திற்கு ரஜினிகாந்த் பொருளுதவி வழங்கியுள்ளார். ஆம், இயக்குநர்கள் சங்கத்தினர் ரஜினியிடம் வேண்டுகோள் வைக்காமலேயே இந்த உதவியை செய்துள்ளார்.

கிட்டத்தட்ட 1500 பேருக்கு உதவும் வகையில், 10 கிலோ எடை கொண்ட அரசி மூடைகள் மற்றும் 6 கிலோ எடை கொண்ட மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

இது குறித்து இயக்குநர்கள் சங்கம் ரஜினியை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்றைய கோவிட் 19 வைரஸ் எதிர்ப்பில் தொழில் இன்றி வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் உங்கள் கலைக் குடும்பத்தின் இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தாங்கள் இன்று அனுப்பி வைத்த நிவாரண பொருட்கள் கிடைக்கப் பெற்றோம்.

குறிப்பறிந்து கேட்காமலேயே, உங்கள் கலைக்குடும்ப சகோதரர்களுக்கு வாரி வழங்கும் தங்கள் கொடையுள்ளத்தை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. போற்றுகிறோம்.

தங்கள் நலமும் புகழும் உயரட்டும் குடும்பம் நீடுழி வாழட்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3

வார்த்தைகள் இல்லை, இந்த வள்ளலை பாராட்ட: கேப்டனை பாராட்டிய சேரன்!

0
Vijayakanth

வார்த்தைகள் இல்லை, இந்த வள்ளலை பாராட்ட: கேப்டனை பாராட்டிய சேரன்! கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் கல்லூரியில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று விஜயகாந்த் கூறியதைத் தொடர்ந்து இயக்குநர் சேரன் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்க செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறிய தேமுதிக தலைவர் விஜயகாந்தை இயக்குநர் சேரன் பாராட்டியுள்ளார்.

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக மே 3 ஆம் தேதி வரையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

யாருமே வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், மக்களை காக்கும் பணியில் காவல் துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என்று பலரும் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த பணியில் ஈடுபடும் போது சிலர் தங்களது உயிரையே தியாம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பினால், நரம்பியல் மருத்துவர் சைமன் உயிரிழந்தார்.

ஆனால், அவரை உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பும், தாக்குதலும் எழுந்தது. போலீஸ் பாதுகாப்புடன், மருத்துவர்களே அடக்கம் செய்யும் நிலை வந்தது.

இந்த நிலையில், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ஆண்டாள் அழகர் கல்லூரியில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்துக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

வார்த்தைகள் இல்லை… இந்த வள்ளலை பாராட்ட… வாழவேண்டியரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன். உங்க பெரிய மனசுல உங்க உயரத்தை இன்னும் உயர்த்திக்கொண்டீர்கள்.

கொரோனாவில் பலியாகும் உயிருக்கு அடைக்கலம் தந்த இலக்கியங்கள் காணாத வள்ளல்… என பாராட்டி பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3